பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

3. பொருளியல் (5)

1. நாடு.

பொருளியலாவது பொருளின் பகுதி கூறுதல். அது கூறிய அதி காரம் ஐந்தினும் முற்பட ப் பொருளாகுதற்கு இட மாகிய நாட்டியல்பு ஒாதிகாாத்தானும், அந்நாட்டிற்கு ஏமமாகிய அரணியல்பு ஒாதி காரத்தா னு:ம், அவ்விடங்களிலாக்கப்பட்ட .ெ ப ா ரு ள் ஒாதிகாரத்

தானும், அப்பொருளினா னுண் டாக்கப்பட்ட படையியல் இரண்டதி

து காரத்தானும், (அப்படையின் நன்மையாலாக்கும் படைக்செருக்கு ஒரதிகாரத்தானும்) கூறப்பட்டது. இஃது அமைச்சராற் செய்யப்படு தலின், அதன் பின் கூறப்பட்டது. அவற்றுள் நாடாவது நாட்டிலக்

கனங் கூறுதல்.

731. வருபுனலும் வாய்ந்த மலையும் இருபுனலும்’

வல்லரணு நாட்டிற் குறுப்பு.

ஆற்று நீரும் வாய்ந்த மலையும் நிலை நீரும் ஊற்று நீரும் வலிய அரணும் நாட்டிற்கு அங்கம். நாடாக்கும் இடத்துயாறொழு கும் இடத்தினையும், பயன்படுமலையினையும், ஏரி ஆக்கும் நீர் நிறுத்தலா மிடத்தினையும் கு ன் று க ல் லி நீருண் டாக்கலாமிடத் தினையும், அரணாக்கும் இடத்தினையும் கண்டு, அவ்விடத்தை

நாடாக்குக; அவை நாட்டிற்கு றுப்பாதலால், (எ-று) .

இவ்வைந்துங் குறையாமல் வேண்டுமென்றது. 1.

732. பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம மணியென் 11 நாட்டிற்கிவ் ைவந்து.

(இ-ள்) நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடை மையும், இன்பமுடைமையும், காவலுடைமையு மென்று சொல்லப் பட்ட இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர். (எ-று).

- = - - _

1. இருபுனலும் 2. வருபுனலும் என்பன மனக்பாடம்.