பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

4. நட்பியல் (5)

1. நட்பு

நட்பியலாவது, அறம் பொருளின்பமென்னும் மூன்றின் கண்ணும்நின்று நன்னெறிக்கண் உய்க்கும் ஆதலின் அதனிலக்கணம் கூறுதல். அரசன் தானும் திருந்தித்திருந்தினாரையும் கூட்டிக் கொண்டுநாடு முதலான பொருளையும் பெற்று அதனை அழியாமல் காக்கும் படையை உடைய சாயினும், காமத்தானாதல் மயக்கத் தானாதல் பிறழ ஒழுகுவனாயின், இவை எல்லாப் பொருளையும் கெடுத்துத் தானும் கெடுவன் எ ன் று அவ்வாறொழுகுங்கால் தன் னில் பெரியவராகிய ம ந் தி ரி புரோகிதரை ஒளித்தும், தன்ஏவல் வழிவரும் அமாத்தியரையும் கேளாதும் ஒழுகுவன் ஆ த லி ன், அவ்விடத்து உடன்பட்டு நின்று பாதுகாப்பர் வேண்டும் என்று இப்பொருள் கூறப்பட்டது. அதுகூறிய அதிகாரம் ந்தினும் முற்பட நட்பிலக்கணம் ஓரதிகாரத்தானும், அவரை ஆராயுமாறு ஓரதிகாரத்த னும், நட்கப்படாதாரிலக்கணம் ஒரதி காத்தானும் மனத்தினால் நட்பின்றி நட்டார் போன்று ஒழுகுவார் திறன் ஒரதிகாரத்தானும் கூறப்பட்டது. அவற்றுள், நட்பாவது தட்போர் மாட்டுச் செய்யும் திறன் கூறுதல்.

781. செயற்கரிய பாவுன நட்பி ன துபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

(இ-ள்) நட்புப்போல உண்டாக்குவதற்கு அரியன, யாவை யுள? அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப் போலப்பிறர் நல்வினை செய்தற்கு அரிதாகக் காக்கும் காவல் யாவையுள? (எ-று).

இது நட்புத் தேடலரிது என்றது. 1

782. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பதே நட்பு.