பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

2. நட்பாராய்தல்

796. ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்

கேண்மை யொரீஇ விடல்.

(இ-ள்) ஒருவற்கு இலாபம் ஆவது அறிவிலாதாரோடு நட்பாகுதலை நீங்கி விடுதல், (எ-று) .

இது பேதையார் நட்புத் தவிர்கவென்றது.

797 உள்ள ற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ள ற்க

வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு.

இ=ள்) தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையா தொழிக; அது போல, அல்லல் வந்துவிடத்து வலியறுப்பாரது

நட்பைக்கொள்ளாதொழிக, (எ. நவ).

இது இழி குணத்தார் நட்புத் தவிர்க வென்றது. 7

798. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை

யுள்ளினு முள்ளஞ் சுடும்.

( இ-ள்) கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்; அவர் சொல்லுமதனினும், (எ-று).

இது கேட்டி ற்கு உதவாதார் நட்பைத் தவிர்கவென்றது. 8

79. கேட்டி ைமுண்டோ ருறுதி கிளைஞரை

நீட்டி யளப்பதோர் கோல்.

( இ-ன்) கேடுவந்தவிடத்தினும் ஒரு பயனுண்டாம்: அக்கேடு

நட்டாரது தன்மையை (நீட்டி) யளந்தறிதற்கு ஒரு கோலா மாத லால் , (எ-று).

மேல் கெடுங்காலைக்கைவிடுவாரை விடவேண்டு மென்றார். அவரை அறியுமாறென்னை யென்றார்க்குக் கேட்டா லல்லது அறிதல் அரிதென்று கூறிற்று. o