பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

4. தீ நட்பு

(இ-ள்) அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனி

ஆறும் அறிவுடையார் பகைமை கோடி மடங்கு மி க் க நன்மை

இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது. 3

814. 19ருகுவார் போலினும் பண் பிலார் கேண்மை

பெருகலிற் குன்ற லிரிைது.

(இ- ள்) கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்பு ை யரா யிருப்பிலும், குணமில்லாதார் நட்புப்பெருகுமதனினும்

குறைதல் நன்று. (எ- று) .

இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது. 4.

8 5. ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்.

(இ-ள்) தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை, நட்பென்று சொல்லுவதும் செய்யாராய் விழவிடுக, (எ-று).

இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது. 5

816. எனைத்துங் குறுகு த லோம்பன் மனைக்கெழீஇ

மன்றிற் பழிப்பார் தொடர்பு.

(இ-ள்) சிறிதும் செறிதலைத் தவிர்க, மனையின்கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றங் கூறுவாரது நட்பைத் தவிர்க. (எ-று).

இது குற்றங்கூறுவார் நட்புத் தீதென்றது. 6

817. கனவினு மின்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.

(இ-ள்) பயன்படும் நனவின் கண்னேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாதாம் செய்யுந்தொழில் வேறாக, சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, (எ-று)

இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது. 7