பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265

4. பகை மாட்சி

888. அஞ்சு மறியா னமைவில னிகலான்

றஞ்ச மெளியன் பகைக்கு.

(இ-ள்) அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவன் வலிமை அறியன், அமதியிலன், ஈயமாட்டான்; இப் பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன், (எ-று).

இஃது, இவை நான்கு முடையவன் தோற்குமென்றது. &

869. நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்

யாங்கனும் யார்க்கு மெளிது.

(இ-ள்) வெகுளியின் நின்று நீங்கானாய், நிறையுடைமை யிலனாயின் அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது. (எ-று).

இஃது, இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந்தோற்கு

மென்றது. 9

870. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க் கினிது.

( இ-ள்) ஒருவினை செய்யக் தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான். அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது ஆம். (எ-று).

இவன் பகைமையால், பகைவர்க்கு இனிமை உண்டாகு மென்றது. இவை ஐந்தினாலும் தான் திருந்த வேண்டும் என்று கூறப்பட்டது. I go