பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விரைவின் மகளிர்

(இ-ஸ்) பொருளே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே பங்கு : ம யக்கம், இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்று மைப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியது போலும், (எ-று).

கேடுவரினும் இன்பம் தருமாயின் புணர்ச்சியான் வரும் குற்ற மென்னையென்றார்க்கு அவர் இவ்வாறு வருந்துவர் ஆதலின் இன்பம் இல்லை என்று கூறப்பட்டது. இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது.

914. பொருட்பொருளார் புன்னலத் தோயா ரருட்பொரு

ாையு மறிவி னிவர்.

(இ-ள்) பொருளைப் பொருளைாகக் கொள்வாரது புல்லிய ாலத்தைத் தோயார், அருளைப் பொருளாக ஆராயும் அறிவு

டையார், (எ-று).

அருளுடையார் ஆ.(ராயு) ம் அறிவு என்றமையான் இவரை அறனறிவார் சாரார் என்றது; என்னை அறத்தைக் கெடுப்பார்

ஆதலின். 4.

915. பொதுநலத்தார் புன்னலத் தோயார் மதிநலத்தின்

மாண்ட வறிவி னவர்.

(இ-ள்) எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார் மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறி

வுடையார், (எ-று)

புத்திமான்கள் சேராசென்றமையால், பொருள் கருதுவார்

சேரார் என்றார் பொருளைக்கெடுப்பராதலின். 5

9 16. தந் நலம் பாரிப் பார் தோயார் தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப் பார் தோள்.

(இ- ள்) தம்முடைய நலத்தினை உலகின்கண் பரப்புவார் சேரார் ; வன ப்பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல் லார் மாட்டும் பரப்புவார் தோளினை , (எ-று).