பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301

4. சான்றாண்மை

98 6. சால் பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல்.

(இ-ள்) சால்பிற்கு அளவு யாது எனின், தோல்வியைத் தனக்கு நிகர் அல்லாதார் மாட்டும் கொள்ளுதல் என்றவாறு.

இஃது. எல்லார்க்கும் இனிமை செய்யவேண்டும் என்றது. 6

987. இன்னா செய் தார்க்கு மினியவே செய்யாக்கா

லென்ன பயத்ததோ சால் பு.

(இ-ள்) தமக்கு இன்னாத செய்தவர்கட்கும் இனிய வற்றைச்

செய்யாத காலத்துச் சால்புடைமையால் பயன் யாதோ , (எ- று) .

இஃது, இன்னாதார்க்கும் இனிமை செய்யவேண்டும் என் &). 7.

988. கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.


(இ-ள்) உலகியற்கை அறிந்து சான் றாண்மையை மேலிட் டுக் கொள்ளும் அவர்களுக்கு நல்லவாயின எல்லாம் இயல்பு என்று சொல்லுவர் அறிவோர் , (எ-று) .

இது, மேற்கூறிய வாறே அன்றி நற்குணங்கள் எல்லாம் வேண்டும் என்றது. 8

989. ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்

காழி யெனப் படு வார்.

(இ-ள்) சான்றாண்மைக்கு ஒரு கடல் என்று பிறரால் சொல் லப்படுமவர்கள், காலம் தனது தன்மை குலையினும் நின்ற நிலை

குலையார், (எ-று).

இது, சான்றார் நின்ற நிலை குலையார் என்றது. Q

990. சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநீலந்தான்

றாங்காது மன்னோ பொறை.