பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313

8. குடி செயல் வகை

அவ்வாறு துன் புற்று ஒழுகுதல் ஆகுமோ என்றார்க்குக் கூறப் 6 . ”

1027. குழாமற் றானே முடிவெய்துந் தங்குடி யைத்

தாழா துளுற்று பவர்க்கு.

(இ-ள்) தங்குடியைத் தாழச்செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் (தானே) முடிவுபெறும், ( - )

யாதானும் ஒரு வினையை முடியுமாறு எண்ணி அதன்பின் முயன்று முடிக்க வேண்டும் அன்றே இஃது அவ்வாறன்றி இவண் கருதின வளவிலே அவரது நல் வினைதானே முடிக்கும்; இவன் அதனை மேற்கோடலே வேண்டுவ தென்றவாறு ஆயிற்று. 7

1028. குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வ

மடிதற்றுத் தான்முந் துறும்.

(இ ன்) குடியையோ ம்புவேனென்று கருதிமுயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுத் தான் முற்பட்டு முயலும் (எ-று).

மடிதற்றல்-தொழில்செய்வார் ஆடை உடுப்பதோர்திறன். மேல் சுற்றத்தார் நல்வினை இலராயின் ஓம்புமாறென்னை என் றார்க்குத் தெய்வம் அருள் செய்யும் என்று கூறப்பட்டது. இத் துணையும் குடிஒம்புதல் வேண்டும் என்று கூறிற்று. &

1029. குற்ற மிலனாய்க் குடி செய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்று முலகு.

(இ-ள்) குற்றப்பட ஒழுகு த லிலனாய்த் தன்குடியை யோம்பி வாழுமவனை, உலகக்தாரேல்லாரும் தமக்குச் சுற்றமாக நினைத் துச் சூழ்ந்து நிற்பர். (எ-று).

இது குடி ஒம்புவார்க்குப் பயன் கூறிற்று. 9

10.30. இடுக்கண்கால் கொன்றிட விழ மடுத்துரன்று

நல்லா ளிலாத குடி .