பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

1 3 . கயமை

1977. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடி றுடைக்குங்

கூர்ங்கைய ரல்லா தவர்க்கு.

(இ-ள்) தங்கதுப்பினை ஒடிக்கும் வலிய கையினை உடைய ரல்லா தார்க்கு, ஈரக்கையுந் தெரியார் கயவர், (எ-று).

ஈசக்கை-உண்டு கழுவினகை, கூன் கை என்று பாடம் ஒதினும் அமையும். இஃது இரப்பார்க்குக் கொ டாரென்றது. 7

1078. அறையறை யன்னர் கயவர்தாங் கேட்ட

மறைபிறர்க் குய்த்துரைத்த லான்.

(இ-ள்) க ய வ ர் அறையும் பறைபோல்வர்; தாங்கேட்ட

மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான், (எ-று).

இஃது, அடக்கமில ரென்றது. 8

1079. சொல்லப் பயன்படுபவர் சான்றோர் கரும்புபோற்

கொல்லப் பயன்படுங் கீழ்.

(இ-ள்) பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன்மக்கள்; அவ்வாறன்றிக் கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கிழ்கக்கள், (எ-று).

இஃது, ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது. 9 1080. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்

விற்றற் குரியர் விரைந்து.

(இ-ள்) கயவர் யாதினுக்குவல்லரெனின், தமக்கு ஒரு துன்ப முற்றால் விரைந்து தம்மை விற்க வல்லர், (எ-று).

இது, நிலைமையில ரென்றது. 10

குடியியல் முற்றிற்று பொருட்பால் முற்றிற்று.

1. கூன் கைய ‘ மணக். பாடம்.