பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

2. வாழ்க்கைத் துணை நலம்.

(இ-ள்) ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையளால்ை,

எல்லாமிலனேயாயினும் இல்லாததியாது? மனையாள் மாட்சிமை

இலளால்ை, எல்லா முடையாளுயினும் உண்டானதி யாது? (எ-று).

இஃது ஒன்றும் நன்றாக மற்றுள்ள இன்மை தோன்றாது. அது போல இஃதொன்றும் தீ தாக மற்றுள்ள உடைமையும் தோன்றா தென்றது. இத்துணையும் மனையாளொழுக்கமுடையளாக வேண்டு மென்றவாருயிற்று. |-- 6

57. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் .

(இ-ள்) தன்னையுங் காத்துத், தன்னைக்கொண்டவனையும் பேணி, நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளைப் பெண்ணென்று சொல்லப்படும் (எ-று)

புகழ் படைத்தலாவது, அறம் பொருள் இன்பங்களைப்பற்றி யுலகத்தார் பழியாமல் ஒழுகி ல்ை அவரால் நன்மை சொல்லப் பெறுதல். சோர்வின்மையாவது, அப்பொருளைக் கடைப்பிடித்தல் இஃதொழுகுந்திறன் கூறிற்று. இதேைன பெண்மையிலக்கணம் எல்லாம் கூறப்பட்டது. 7

58. தெய்வந் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யு மழை.

( இ-ள் ) தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன் கணவனென்றே க ரு தி, அ. வ னை நாடொறுந் தொழுதெழுமவள் பெய்யென்று .ெ ச ல் ல மழை பெய்யும், (எ-று).

எழுதல்-உறங்கி எழுதல், தெய்வமும் ஏவல் செய்யுமென்று மேற்கூறிய ஒழுக்கத்தான் இம்மைப்பயன் கூறிற்று 8

59. பெற்றார்ப் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழு முலகு.