பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

6. நினைத்தவர் புலம்பல்

இது, ‘நினையாரோ நினைப்பாரோ’ எ ன் று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது. 4

1205. விளியுமென் னின்னுயிர் வேறல்ல மென்பா

ரளியின்மை யாற்ற நினைத்து.

(இ-ள்) நம்முள் நா ம் வேறல்லேமென்று சொன்னவரது

அருளின்மையை மிகவும் நினைந்து எனதாகிய இன் உயிர் அழியா நின்றது. (எ-று). =

இது. தலைமகன் நினையானென்று தேறிய தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது. 5

1206. மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே

தனுள்ளினு முள்ளஞ்சுடும்.

(இ=ள்) அவரை மறந்தபொழுது என்னாவன் கொல்லோ, மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின் றது, (எ- று) .

இது, சிறிய உள்ளிப் பெரியன மறக்க வேண்டும்’ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 6

1207. எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன் றில்.

(இ-ள்) யாதொன்றினானும் இனிய தொன்றே காமம்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லைகாண், (எ-று).

இது. “நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்கும்’ என்ற தோழியை மறுத்துத் தலைமகள் கூறியது. 7

1208. மற்றியா னென்னுளேன் மன்னோ வவரோடி யா

தனுற்ற நா ளுள்ள வுளேன்.

(இ-ள்) யான் அவரோடு புணர்ந்த நாட்களை நினைத்த

லானே உயிர் வாழ்கின்றேன்; அல்லது யாதனான் உளேனாய் வாழ் கின்றேன். (எ-று).