பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375

6. நினைந்தவர்.புலம்பல்

இ.து. த லைமகன் தலையளியை நினைத்து ஆற்றாணாயின. கலைமகளை (நோக்கி) இவ்வாறு நினைத்திரங்கல் உயிர்க்கு இாறுதியாகும்’ என்ற தோழிக்கு அவள் கூறியது. 8

12.09. எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ

காதலர் செய்யுஞ் சிறப்பு.

(இ-ள்) யாம் அவரை எவ்வண்ணம் நினைப்பினும் வெகு எார்; அவ்வண்ண மன்றோ அன்புற்றார் செய்யும் அருள், (எ-று).

அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை என்றது. தலைமகள் ஆற்றாமைக்கண்டு, அருள் இலன்’ என்று இயற்பழித்த தோழிக்கு, “யாம் கொடியர் என்று நினைக்கவும் அதற்கு முனியாது நெஞ்சத்தே உறையாநின்றார்; ஆ த ல ா ன் அருளுடையார் என்று கொள்ளப்படும்” என்று இயற்பட மொழிந் * l • 9

1210. விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப்

படாஅது வாழி மதி.

(இ-ள்) என்னெஞ்சை விடாதே போன வரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி, (எ-று) .

பட்டதாயின், என் கண் உறங்கும்; உறங்கினால், அவரைக் காணலாமென்பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. 1ெ

1. படாஅது என்பது மணக். பாடம் .