பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

17. தீவினையச்சம்

(இ-ள்) எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காதே நின்று புக்குழிப் புகுந்து கொல்லும்,

(எ- று) . *

அ.தா.மாறு பின்பே கூறப்படும். மேல் தீவினை செய்யற்க என்றார்; அதல்ை வரும் குற்றமென்னை யென்றார்க்குக் கூறப் பட்டது. 2

203. தீயவை செய்தார் கெடுத னிழறன்னை

வியா தடியுறைந் தற்று.

(இ-ள்) தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின் கீழ் ஒதுங்கினாற் போலும், (எ-று) .

இதனைச் செய்தார்க்கு அனானாய பாவம் புண்ணியம் உள்ள ளவும் உச்சிக்காலத்து நிழல் உள்ளடியிலொதுங்கினாற் போலத் தன்னுள்ளே சுரந்துநின்று பின்பு விரியுமாறு போலப்புண்ணிய விறுதி யிலே அக்கேட்டைத் தப்பாமல் தரும் என்றவாறு மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார், அ.தடுமாறு காட்டிற்று. 3

204. மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழி

னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

(இ-ள்) பிறர்க்குக் கோட்டை மறந்துஞ் சூழாதொழிக சூழ் வனாயின், அனாவற் சூழப்பட்டவன் தானே மாறாகக் கேடு சூழ் வ ன் முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயத்தலாகிய அறத்தானே சூழும், (எ-று).

இது, தீயவை நினைப்பினுங் கேடு தருமென்றது. 4

20.5. இலமென்று தீயவை செய்யற்க செய்யி

னிலனாகு மற்றும் பெயர்த்து.

(இ-ள்) நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக்கருதித் சீவினையைச் செய்யாதொழிக, செய்வனாகில் பின்பு நல்குரவே பயக் கும் செல்வம் பயவாது. (எ-று)