௧௧௪
முன்னுரை
துளிநசைப் புள்ளின்நின் நளிநசைக் கிரங்கிநின்
அடிநிழல் பழகிய அடியுறை
கடுமான் மாறி மறவா தீமே'
---புறம்: 198: 22 - 27.
இனி, வல்வில் ஓரியைக் கழைதின் யானையார் பாடியது:
'தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே!
ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்!
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர் அதனால்
புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது காக்கும் வள்ளியோய் நின்னே'
--புறம்: 204: 5 - 14.
இனி, பரிசில் நீட்டித்த குடக்கோச் சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது)
'உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் . . . . .
.. . . . . . . . . . . . . . . . , , என்
நுணங்கு செந்நா வணங்க ஏத்திப்
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
ஆடுகொள் வியன்மார்பு தொழுதனென் பழிச்சிச் செல்வல்'
--புறம்: 211; 7 - 8; 14 - 17.
இனி, கிள்ளிவளவனை ஐயூர் முடவனார் பாடியது:
‘புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை'
- புறம்: 228: 7,
இனி, நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது;