பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார்

ககரு 


இரந்தோர்க்கு மறுப்பறியலன்
வேந்துடைய வையத்து ஓங்குபுகழ் தோற்றினன்'
புறம் 239, 9-10

இனி, ஆய்அண்டிரனைக் குட்டுவன் கீரனார் பாடியது:

'ஆடுநடைப் புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க் கருகா ஆஅய் அண்டிரன்
................................
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசிய ராகிப்பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர் இனியே'
புறம் 240, 1 . 3, 11 - 14.

இனி, பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி கிழார் பாடியது.

'புலவுக்களம் பொலிய வேட்டோய்நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே'
புறம்: 372, 12 - 13.

இனி, பெருநற் கிள்ளியை உலோச்சனார் பாடியது:

கரவில்லாக் கவிவண்கையான்
வாழ்கவெனப் பெயர்பெற்றோர்
பிறர்க்குவமம் தானல்லது
தனக்குவமம் பிறரில்லென
அது நினைந்து மதிமழுகி
ஆங்கு நின்ற எற்காணுஉ
........................
மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
கடல்பயந்த கதிர்முத்தமும்
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
நனவில் நல்கியோன் நசைசால் தோன்றல்'
--புறம் 377; 8 - 13, 16 -20.

இனி, நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது:

'துப்பெதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்