பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

௧௧



தகவுரை

செஞ்சொற்கதிரவன், சொல்லாய்வறிஞர்
ப. அருளி
துறைத்தலைவர்
தூய தமிழ்- சொல்லாக்க அகரமுதலிகள் துறை
தமிழ்ப்பல்கலைக்கழகம்
தஞ்சாவூர். 5

இருபதாம் நூற்றாண்டின் இறுதியெல்லையோரத்திற்கு மிக அருகில், இன்று நாம் உலவுகின்றோம்! அறிவியல் வளக்கொழிப்பின் உச்சவிளைவுகளையெல்லாம் ஒரு சேரத் துய்த்துத் திளைக்கும் உயரிய காலத்தில் மாந்தஇனமே உயிர்த்துக்கொண்டுள்ளது!

இங்குள்ள ஒரு சிற்றுாரில் சிறிய கணிப்பொறியிற் பிணைப்புற்றுள்ள தட்டச்சுப்பொறியில் தட்டப்பெறும் மெல்லிய தட்டுகளை நன்றாகக் கவனிக்கவேண்டும்! . . . . . . மெல்லிய தட்டு: . . . . . "தட்டு"- என்றுஞ் சொல்லக்கூடாது! . . . மெல்லிய தீண்டல்! அத் தீண்டலுங்கூட மெல்லியமகளிரின் மெல்லிய விரலின் வழியதான மெல்லிய தீண்டலாகத் தீண்டும் மீமெல்லிய தொடுகையாகவே இருக்கவேண்டும்! ஆங்கிலத்தில் இத் தீண்டல் முறையை ("பெண்டின் தொடுகை -), "Lady's touch" என்பர்! இன்னும் மிகுமென்மைப்படுமாறு (துரவித் தொடுகை) - "Feather-touch" என்றவாறும் உரைப்பர் உலகின் ஏதாம் ஒரு மூலையிலுள்ள ஒரு சின்னஞ்சிறிய சிற்றுாரில் உள்ள மற்றொரு கணிப்பொறியிலுங்கூட எழுத்துப்பதிவுகளைக் காணலாகும் அதற்குரிய படப்படிகளையே பெற்றுக்கொள்ளலாகும் காலம், இது! அத் தட்டுகை நிலையால் - உலகத்தின் நூற்றுக்கணக்கான மூலைமுடுக்குகளில் கோடிக்கணக்கான கணிப்பொறிகளின் வழி அதற்குரிய பதிவுகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினாலுங் கூட