பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௫௫'அரசன் குற்றத் தண்டனைப் பொருள்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. தண்ணீரில் போட்டுவிட வேண்டும். அல்லது பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும்'

மனு: 9 244,225,246.

'பிராமணன் தன் தொழிலைச் செய்ய முடியாத பொழுது க்ஷத்திரியன் தொழில் மேற்கொண்டு உலகை ஆளுதல் வேண்டும்'

'பிராமணன் தன்தொழில், க்ஷத்திரியன் தொழில் இரண்டாலும் வாழமுடியாத பொழுது வைசியன் தொழிலாகிய வியாபாரத்தில் ஈடுபடலாம்'

மனு: 10 81, 82.

'பிராமணனுக்கு வேதம் ஓதலே தவம், க்ஷத்திரியனுக்கு இந்நூலில் சொன்னபடி ஆட்சி செய்தலே தவம், வைசியனுக்கு வர்த்தகம் செய்தலே தவம் சூத்திரனுக்குப் பிராமணனுக்குப் பணிவிடை செய்தலே தவம் ஆகும்'

மனு 11 235,

'மனுவில் சொல்லும் கருமங்களில் தவறிய அரசன் மலம், பிணம் இவற்றைத் தின்னும் கடபூதம் என்னும் பேயாகப் பிறப்பான், மேற்சொன்ன வேத ஸ்மிருதிகளுக்கு அடங்காமல் விரோதமாக நடக்கும் சூத்திரன் சீலைப்பேனைத் தின்னும் பேயாகப் பிறப்பான்'

மனு: 12 71, 72.

'பிராமணர் இந்த மனு ஸ்மிருதியைப் படிக்கலாம்; மற்ற வருணத்தார்க்கு ஒதுவிக்கக் கூடாது

மனு: 1 - 103.

படைத்தளபதி, அரசாளுகை, நியாயம், உலகாளுமை, இவையெல்லாவற்றுக்கும் வேதமறிந்தவனே தக்கவனாவான்'

வேதத்தை யறிந்தவனே பாவத்தைப் போக்க வல்லவன

வேதத்தை யறிந்தவன் எந்த ஆச்சாரிய ஒழுக்கமுள்ளவனாக இருந்தாலும், அவனே இம்மைக்கு அதிகாரி

வேதத்தை யறிந்தவனே எல்லாரினும் உயர்ந்தவன்

மனு: 12 100

முதல் 103 வரை இதில் (மனுஸ்மிருதியில்) எல்லா தர்மமும் சொல்லப்படவில்லை. சொல்லப்பட்டவையும் கால, இடவேறுபாட்டால் சந்தேகத்திற்கிட முள்ளவையானால், அது தொடர்பாக, வேதமறிந்த பிராமணர்கள் எந்தத் தர்மத்தை ஏற்படுத்துவார்களோ, அதுவே நிச்சயமான தர்மமாகும்.