பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௫௬

முன்னுரை 


மனு: 12 108,

'வேதங்களை மறக்கக் கூடாது; பரிக்ஷத் (அறிஞர்கள்) அவைக்கு அவையே இலக்கணம். வேத மறிந்த பிராமணன் சொல்வதே தர்மம் வேதமறியாத பத்தாயிரம் பேர் கூடிச் சொன்னாலும் அது தர்மம் ஆகாது'

மனு: 12 110 114.

'மனு முதலிய தர்மங்களில் சொல்லப்பட்டவற்றைப் பிசகாமல் பின் பற்றுபவர்களே சுவர்க்கம் அடைகிறார்கள்.

மனு: 12 116.

இவ்விடங்களில், 'மனோன்மணியத்'துள் கூறப்பெற்ற 'மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி' என்பது நன்கு புலப்படுகின்ற தன்றோ?

(மனுஸ்மிருதியோடு வைத்து எண்ணத்தக்க ஸ்மிருதிகளைச் செய்தவர்கள்: பவுத்தயாயினர், நாரதர், பிரகஸ்பதி, விஷ்ணு, ஆபஸ்தம்பர், இரண்யகேசின், கோபிலா, அவர்மகன் உசானன், யக்ஞவல்கியர், ஒளரிதர், அத்ரி, காத்தியாயினர், ஆங்கிரசர், யமன், ஸம்வர்த்தர், பராசரர், வியாஸர், சங்கலிதர், தக்கர், கெளதமர், சாதான்மர், வாஸிஷ்டர் முதலியோர் ஆவர்.)

இனி, இங்குக் காட்டப் பெற்ற ஆரிய தர்ம வர்ணாச்சிரம நெறிகளுக்கு மாறாகவே, திருக்குறளில் தமிழியல் அறக் கோட்பாடுகள், சாதி, மத வேறுபாடுகளுக்கு உட்படாமல் பொதுவிலும், நடுநிலை தவறாமலும் கூறப் பெற்றுள்ளமைக்குச் சில சான்றான கருத்துகளைக் காண்க

'சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி' ---118.

'வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடாது எனின்' --- 546.

இங்கு அறநெறிக்கு அடையாளமாகத் துலை (தராகக் கருவி காட்டப் பெற்றுள்ளது. இவ் வடையாள இலச்சினை (Symbol. Sign) முதன் முதலில் காட்டப்பெற்றது திருவள்ளுவராலேயே என்று உணர்தல் வேண்டும். இக்குறியே இன்று வரை அறமன்றங்களில் காட்டப் பெறுவதையும் அறிக அறநெறி (நீதி)க்கு இதைவிட வேறு இணையான அடையாளப் பொருள் இல்லை என்று அறிதல் வேண்டும்.

இனி, மேலும் திருவள்ளுவர் காட்டும் அறம் வழங்கு கருத்துகளையும் காண்க

'கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்' 116.