பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௫௭'ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்' ---214.

'ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க(து) உடைத்து' ---220.

'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்' ---388

'குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்' ---504.

'நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்' ---511.

'ஒர்ந்துகண் ணோடாதுஇறைபுரிந்து யார்மட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை' ---541.

'வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி' ---542.

'எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்டதத்தான் தானே கெடும்' ---548.

'குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்' ---549.

'கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல் கோடிச்
சூழாது செய்யும் அரசு' ---554


'மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி' ---556.

'தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து' ---561.

'இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்' ---695,

இங்கு, இவற்றுள்ளும் இவை போலும் ஆங்காங்குக் கூறப்பெறும் பிறவற்றுள்ளும், அரசன் குடிமக்களிடம் எவ்வாறு நடுநிலையுடனும், சமநிலை ஒத்த உணர்வுடனும், முறையாகவும், குணம் குற்றம் இரண்டையும்