பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௭௧


மிகையில்லை. ஆரியரின் வர்ணாச்சிரம தர்மவியல் கோட்பாடு களின் படி பெண்கள் மிகவும் இழிவானவர்கள், கீழானவர்கள், வெறும் உடலுறவு இன்பத்திற்காகவே படைக்கப்பெற்றவர்கள். அவர்களுக்குக் குடும்பத்திலோ, குமுகாயத்திலோ எந்த வகையான உரிமையும் இல்லை. உடைமைகளும் இல்லை; அவர்கள் தீவினைங்களின் இருப்பிடங்கள், ஒழுக்கக் கேடுகளின் தூண்டுகோல்கள் என்றே வருணிக்கப் பெறுகிறார்கள். ஆண்களுக்கு உடலின்பத்தை வாரி வழங்கவும், பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்து மக்களினத்தைப் பெருக்கவும், ஆண்களுக்குத் தொண்டு செய்யவுமே அவர்கள் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே ஆரியர்களின் கோட்பாடு, கொள்கை, நடைமுறைகள் எல்லாம். இவற்றை மெய்ப்பிக்க பல்லாயிரக் கணக்கான சான்றுகள், எடுத்துக் காட்டுகள் அனைத்தும் அவர்களின் வேத ஸ்ருதிகளிலும், மனு முதலிய ஸ்மிருதிகளிலும், பாரத, இராமயண, பாகவத முதலிய இதிகாச புராணங்களிலும் உண்டு. அவையத்தனையுமோ அவற்றில் சிலவற்றையுமோகூட இங்கெடுத்துக் கூறுவது சிறிதும் இயலாதது. எனவே மனு நூலில் மட்டுமே இருந்து மொழிபெயர்க்கப் பெற்ற சிற்சில சொலவகங்கள் சுருக்கமாக மிகவும் சுருக்கமாக இங்குக் காட்டப்பெறுகின்றன. அறிவர்கள் அவற்றைக் கொண்டே அவர்களின் இழிவையும் அநாகரிகச் சிந்தனைகளையும் தெரிந்து தெளிவுறுவார்களாக,

பெண்களுக்கு மணம் செய்வதே பூணூல் அணிவது போல் ஆகும்' - மனு 2-67

மகன், மாணாக்கன், மனைவி இவர்களைக் கயிறு, பிரம்பு முதலிய கருவிகளால் அடிக்கலாம் - மனு 4-164

பெண்ணடிமைக் கட்டுப்பாடுகள்: (மிகச் சுருக்கமாகத் தரப்பெறுகின்றன. விரிவாகப் பார்க்க விரும்புபவர்கள் மனுநூலின் 5 ஆம் பிரிவு 147 ஆம் நெறிமுதல், பார்க்கவும்)

1.பெண் தன்மனம் போனபடி செய்யக் கூடாது (5-147)

2.'பெண் தன் சுவாதீனமாக வாழக் கூடாது.' (5-148, 149), (9-2,3)

3.பெண்கள் அதிகமாகச் செலவு செய்யக் கூடாது (5-150)

4.'பெண் தன் பெற்றோர் விருப்பத்தின் படிதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.' (5-151)

5. பெண்ணுக்குத் தன் கணவனே முழு அதிகாரமுள்ள எஜமானன் -(5-152)


.