பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௭௨

முன்னுரை 


6. தன் கணவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும், இழிந்த நடத்தையுடையவனாக இருந்தாலும், விபச்சாரிகளுடன் உறவு கொண்டவனெனினும் அவனே அவளுக்குத் தெய்வம் (5-154)

7. 'பெண்களுக்கு யாகம், உபவாசம், விரதம் இவை எல்லாம் கிடையாது.கணவனுக்குத் தொண்டு செய்வதே அவளுக்குச் சொர்க்கம்' (5-155)

8. விதவைகள் சொற்ப ஆகாரமே காய், கனி, கிழங்கு ஆகிய புல்லுணவே உண்ண வேண்டும். மாமிசம் உண்ணக் கூடாது', - (5-157)

9. காம உணர்வால் பெண்கள் தம் கணவரலல்லாத பிறர் பெயர் களைச் சொல்லக் கூடாது. - (5-158)

10.'பிள்ளை இல்லை' என்று ஒரு மனைவி வருந்தக் கூடாது. (-159-161)

11. விதவைகளுக்கு மறுமணம் இல்லை (5-162) மறுமணம் செய்துகொள்ளாதவளே கற்புடையவள்.

12. பெண் விபசாரம் செய்யக் கூடாது: (5-163-165)

13. மனைவியை இழந்தவன் வேறு மணம் செய்து கொள்ள வேண்டும் (5-167-169)

14. பெண்களை வைத்துக்கொண்டு அரசன் மந்திராலலோசனை செய்யக் கூடாது. (7-150)

 பிராமணர்களுக்கே பிரம்மச்சாரியம், கிருகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் - ஆகிய ஆஸ்ரம ஒழுக்கங்கள் உண்டு - மனு 6-97

போகத்தை விரும்பும் ஒரு கன்னிப் பெண்ணைப் புணர்ந்தால் குற்றமில்லை. (ஆனால் அதிலும் வர்ணாச்சிரம வேறுபாடுகளுக்கு உரிய முறை உண்டு) - மனு 8-364-366

பிராமணப் பெண்களை விரும்பும் பிற சாதியார்க்குத் தண்டனைகளும் வர்ணாச்சிரம முறைப்படி தரவேண்டும். - மனு 8-375,378

பெண்கள் பருவம் எய்தும் முன்னரே மணம் செய்து கொடுத்து விட வேண்டும்