பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

ககூகூ


ளதும், எண்ணத்தக்கது.

இனி, மனைவி கணவனைப் பிற நேரங்களில் தொழுவது அல்லது வணங்குவது இக்குறளில் கூறப் பெறவில்லை. கணவனுடன் ஒன்றித்துயின்ற மனைவி, அவனுக்கு முன் எழுகிறாள். எழும்பொழுது தன் கணவனை மனத்தால் தொழுது எழுகிறாள். அவனை நிற்கவைத்துப் பின்னர், காலில் விழுந்து, அல்லது குனிந்து காலைத் தொட்டுத் தொழுது எழவில்லை. படுக்கையிலிருந்து கண் விழிப்படைந்ததும், கணவனை மனத்தால் எண்ணித் தொழுது அதன் பின்னரே படுக்கையினின்று எழுகிறாள் என்ற குறிப்பே குறளில் காணப்பெறுகிறது. எழுந்து தொழவில்லை. தொழுது எழுதலே குறிப்பிடப்பெறுகிறது. மேலும், வணங்குதலுக்கும் தொழுதலுக்கும் சில வேறுபாடுகள் உண்டு.

வணங்குதலில், கைகூப்புதல் உண்டு; தலைதாழ்தல் உண்டு; குனிதலும் உண்டு; இனி, கீழே குனிந்து காலைத் தொட்டு வணங்குதலும் உண்டு; சில பொழுது தரையில் உடல் தோய கையும் தலையும் பாதந்தொட வணங்கு வதும் உண்டு. இதில் மிக முகாமையானது. ஆளோ, படிமமோ, சிலையோ எதுவோ, வணங்கப் பெறும் ஒன்றை நேருக்குநேர் நின்றுதான் வணங்குதல் உண்டு. எங்கோ இருந்து கொண்டு எங்கோ உள்ள ஒன்றை வணங்கினான் என்று கூறுதல் மரபுப் பிழை.

ஆனால், தொழுவது நேருக்கு நேராக நின்றும் தொழலாம்; நேருக்கு நேராக அல்லாமல் எங்கேயோ எந்த நிலையிலோ இருந்து கொண் ஒன்றையோ ஒருவரையோ மனத்தால் வழிபடுவதும் செய்யலாம். ஆனால் பெரும்பாலும் மனத்தால் எண்ணி வழிபடுவதைத்தான் தொழுதல் என்னும் சொல்லால் குறிப்பார். இக்குறளில் தொழுதல் குறிப்பு அவ்வகையில்தான் காணப்படுகிறது. தொழுதெழும் குறிப்பும் காணப்படுவதால், இரவில் கணவனுடன் உறங்கிய மனைவி, விடியலில் கண்விழித்த பொழுதில், படுத்த நிலையிலேயே, மனத்தால் கணவனைத் தொழுதுவிட்டு, அதன்பின் எழுகிறாள் என்றுதான் பொருள் கொள்ளுதல் வேண்டும் என்க. மற்றும் இதில், கணவன், மனைவியைக் கட்டாயப்படுத்தித் தன்னைத் தொழச் செய்வதோ, மனைவி, கணவன் நின்ற நிலையில் தொழுவதோ குறிக்கப் பெறவில்லை. மனைவி அவன் மேல்வைத்த அன்பாலோ, பற்றினாலோ அவன் விழித்தெழாமுன், அவனுடன் படுத்துள்ள நிலையிலேயே, மனத்தால் தொழுது, பின் எழுவது தான் குறிப்படப்பெற்றுள்ளது. அதுவும் அவள் விருப்பமாகத்தான் தொழு கிறாள். இது மன உணர்வின் பாற்பட்டது. மேலும், மனைவி இத்தொழு கையை தன் மனத்துள்ளேயே நிகழ்த்துகிறாளாகையால், இது கணவனுக்கும் தெரியாது. தெரிந்தால், ஒருவேளை அவன் தன்னை இறப்ப மதித்துக் கொள்ளலாம்; பெருமையடையலாம்; செருக்குக் கூட அடையலாம். ஆனால்,