பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உ00

முன்னுரை


நிலை அவ்வாறில்லை. அவள் அவனறிய அவனைக் கைகூப்பியோ மண்டியிட்டோ காலைத்தொட்டோ வணங்குவது இங்கு சொல் லப்பெறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே, இதில் பிழையோ, அடிமைத்தனமோ இருப்பதாகச் சொல்ல முடியாது. இஃது பெண்டிற்கிருந்த இருக்கின்ற வழக்கமே. இதையே நூலாசிரியர் இங்குக் குறிப்பிடுகின்றார். இந்த வழக்கம் நம்பிக்கை உணர்வுடன் கூடியது. இவ்வழக்கம் அக்காலத் திலும் இருந்தது. சில பெண்களிடம் இக்காலத்தும் இருக்கிறது. அறவே இல்லையென்று சொல்ல முடியாது. இவ்வாறு செய்வது, தாங்கள் பிழைபடாமல் இருக்கச் செய்கிறது என்னும் நம்பிக்கை பெண்களிடம் இருந்தது என்பதற்குக் கீழுள்ள சான்றைக் காண்க

குறவர் மடமகளிர் தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும் தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்

. கலி : 39:16-18

இதில் தாங்கள் மட்டுமன்றித் தம் கணவன்மாரும் தங்கள் செயலில் பிழைபடார் என்னும் கருத்து கவனிக்கத் தக்கது.

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். பெண்கள் தம் கணவரைத் தொழுதெழுவதைக் குறித்த நூலாசிரியர், அவர்கள் வேறு தெய்வங்களைத் தொழமாட்டார்கள் என்று கூறுவதையும் சிந்தித்தல் வேண்டும். கற்புடைய பெண்டிர் தம் கணவரையன்றி வேறு தெய்வங் களைத் தொழ மாட்டார்கள். அதற்காக அத்தெய்வங்கள் தங்கியுள்ளதாகக் கருதப்பெறும் கோட்டங்களுக்கோ கோயில்களுக்கோ செல்லமாட்டார்கள் என்பதைக் கண்ணகி வாயிலாக, இளங்கோவடிகள் கூறுவதையும் சிலப்பதி காரத்தில் காணலாம்.

தேவந்தி, கண்ணகியிடம் பல தெய்வக் கோட்டங்களைத் தொழுது வரக் கூறி அழைக்கிறாள். அதற்கு அவள் அது பெருமை இல்லை (பீடு அன்று) என்று கூறி மறுக்கிறாள்.

சோம குண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கி,
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்;
போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்; யாம் ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்கு, அவ்ஆய்இழையாள்,
'பீடுஅன்று என இருந்த பின்னர்,
- சிலப். கனாத்திறம் -59-64