பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௧௨

முன்னுரை 



இவர், பெண்மை யிழிவுக் கூற்றுக்கு மறுப்புரைத்து மெய்யுரை கூறலை உரையினுள் கண்டு தெளிக ஈண்டு விளக்கின் கூறியது கூறலாகும் எனுந் தன்மையால் தவிர்க்கப்பெற்றது.

மொத்தத்தில் திருவள்ளுவப் பேராசான் மக்கட்பேறு அதிகாரத்துள் மக்கள் என்னும் பொதுச் சொல்லையே கையாள்வதுடன் தேவையான பலவிடங்களில் பெண்மைக்கு உயர்ச்சியும் கூறிப் பேசுவர் நிலமென்னும் நல்லாள் (1040) திருதுதல் நல்லவர் நாணு (1611).

-என்றிதுகாறும் கூறிய அனைத்துத் தன்மைகளாலும், மாந்தர்தம் வாழ்வியல், அறவியல், அரசியல், சட்டம், தண்டனை, குமுகவியல் அமைப்பு உடைமைகள் பெண்ணியல் முதலிய அனைத்து நிலைகளாலும், ஆரியவியலின் இழிதன் மைகளும், தமிழியலின் உயர்வுத் தகைமைகளும் நன்கு எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன என்க.

எனவே, இவ்வகையில், திருக்குறளில், நூலாசிரியர், உலகியலுக்கும், மாந்தவியலுக்கும், அறிவியலுக்கும், அறவியலுக்கும், பொதுமைக்கும் நடுநிலைக்கும் பொருந்தும் தமிழியல் சார்ந்த வாழ்வியல் கோட்பாடுகளையே கருதுவர். பேசுவர் என்பதை உறுதியாகக் கொள்க.

"ஆரிய மத(வைதீக)க் கலப்பும், தமிழ்நெறி (ஆகம வழி)க் கலப்பும் தமிழ்நாட்டில், சிற்சில சமையத்தில் சிறிது மிகுந்தும் தோன்றுகிறது. வைதீகக் கலப்பு தமக்கு நலம் தரவில்லை. என்பதைத் தமிழரில் சிலர் உணர்கின்றனர்; ஆனால் இருமை இரண்டு நெறிகளும் கலந்த தன்மை பேசுகின்றனர். இக்காலத்திலும் இருமை தோன்றுகிறது. எல்லாம் இவ்விரு நெறிகளும் ஒருமையாய் முடிந்து, இந்து மதமாகி, வைதிக மதமாகியுள்ள இந்நாளிலும் இந்த இருமை, தோன்றுகின்ற தென்றால் - சங்கிருத வைதிகம் தமிழாகமம் என்னும் இருமை, வேறு பெயரில் வேறு வடிவில் தோன்றுகின்ற தென்றால் - திருவள்ளுவர் காலத்தில் இந்த இருமை, எங்ஙனம் பிறக்க முற்றிருக்க வேண்டும்!.

"மழுங்கிய உணர்வினார்க்கு இன்று இந்த இருமை நிலை தோன்றாது (புலப்படாது) இருக்கலாம். ஒருமைப் பேச்சால் தந்நலம் காண்போர் இருமையை மறைக்க முயலலாம்."

"ஆனால், திருவள்ளுவர் அஃகியகன்ற அறிவர்; நுண்மாண் நுழைபுலப் பெருமகனார்; குடிநலம் பேணும் கொள்கையர்; தந்நலம் நோக்காத தகையாளர்; தமிழ்நாட்டுப் பொதுநலம் போற்றும் அமைச்சியல், அரசியல், பொருளியல் புலவர் எனவே, அவர் வைதிகக் கலப்பும் ஒருமையும் தமிழர்க்கு நலம் தரா எனக் கண்டுகொண்டார். ஆதலின் இருமையை மறைக்க முயன்றிலர். அதனை எடுத்துக் காட்டி இருமையைப் புலப்படுத்தி அயலார் வஞ்சகத்தை விளக்கி - தமிழர்களின் நலம் போற்றப் பற்பல பாடுகள்