உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௨௧



மனத்துக்கண் (34),மோப்பக் குழையும் (90),கெடுவல்யான் (116),வெள் எத்தனைய 595).நிறைநீர (82),நவில்தொறும் (783),பேதைமை (805),மனத்தின் (825), உடம்பாடிலாதவர் (890)-போன்றவை.

செயலுண்மைகள் என்பவை, ஒருவன் தன் செயல்கள் வழியாக அறியப் பெறும் உண்மை நிலைகளாகும். அவற்றுக்குச் சில எடுத்துக்காட்டுகள்:

விசும்பின் (16),செயற்கரிய (26),மக்கள் மெய் தீண்டல் (65), எல்லார்க்கும் நன்றாம் (125), யாகாவாராயினும் (127), நெடும்புனலுள் (495), வினைபகை (674),பொருளென்னும் (753),கேட்டினும் உண்டோர் (196),பொருட்பெண்டிர் (914), கொக்கொக்க (990), கடலோடா (996)போன்றவை.

பொருளுண்மைகள் என்பவை, ஒருவன் தான் காணுகின்ற பொருட்கள் வழியாக அறியப்பெறும் உண்மை நிலைகளாகும். அவற்றுக்குச் சில எடுத்துக் காட்டுகள்:

ஊருணி (215), தொட்டனைத் துறும் (396), படைகொண்டார் (253), நிலத்தியல்பால் (45), பீலிபெய் (475),துணிக்கொம்பர் (476), இனருழ்த்தும் (650), செப்பின் புணர்ச்சி (887)- போன்றவை.

வாழ்வியலுண்மைகள் என்பவை, ஒருவன் தன் வாழ்க்கையின் பட்டறி வால் உணர்ந்து கொள்ளும் உண்மைகளாகும். அவற்றுக்குச் சில எடுத்துக் காட்டுகள்:

இல்லதென் இல்லவள் (53), புகழ்புரிந்த இல்லிலோர்க்கு (59), தக்கார் தகவிலர் (114), தீயினால் சுட்டபுண் (129), புறங்குன்றி (277), உருவுகண்டு (667),நாளென (334), காட்சிக் கெளியன் (386), அரியவற்றுள் (443),உடைத்தம் வலியறியார் (473), ஆகாறு அளவிட்டி (478), எனை வகையான்(514), சொல்லுதல் (664), அகலாது(691), அங்கணத்துள் (720) அமரகத்து ஆற்றறுக்கும் (814) போன்றவை.

இனி, இத்தகைய சிறப்பியல் உண்மைகளை யெல்லாம் நன்கு இருள் தீர எண்ணி, மருள்திர ஆய்ந்து, அவற்றை யெல்லாம் ஒரு சேரத் தொகுத்துக்கொண்டு, அவற்றை எவ்வெப் பிரிவின்கண் அடக்குவது என்று வகுத்துக் கொண்டு, அவ்வப் பிரிவின்கண் அடக்கப்பெறுகின்ற கருத்து களைத் தேர்ந்துகொண்டு, இத்தகைய சீரும்சிறப்பும் மிக்க ஒரு நூலை யாப்பது என்பது ஓர் அரும்பெரும்செய்தற்கரிய செயலாகும். எத்தகைய பேரறிவு சான்ற பெரும் புலவர்க்கும் இஃது எளிதான செயலன்று.

அடுத்து, அவர் தொகுத்தெடுத்த கருத்துகளில், மனவுணர்வு சார்ந்த க்ருத்துகளை அறம் என்றும், அறிவியல் சார்ந்தவற்றைப் பொருள் என்றும், உடலியல் சார்ந்தவற்றை இன்பம் என்றும் முப்பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி,