பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
  • ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் அறம்-மக்கட்டேறு 69

பரி : பெண்ணியல்பால் தானாக வறியாமையிற் கேட்டதாய் என்றார். பாவா : மகன்மேலுள்ள அன்புப் பெருக்கால் அவனறிவை மிகுத்தெண்ணும் தாய்க்கு நடுநிலையறிஞர் பாராட்டு முழு நம்பிக்கை யுண்டாக்கும் என்பதே கருத்து.

8. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றார் அனைத்திலர் பாடு பொருள் - அரசியல் 409 பரி : உடலோ டொழியுஞ் சாதியுயர்ச்சியினும் உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத் தென்பதாம். பாவா : கல்லாதவர் கல்வி நிலைமையும், செல்வ நிலைமையும், தொழில் நிலைமையும் அதிகார நிலைமையும் பற்றிய மேல் வகுப்பு களிற் பிறந்தாராயினும்

9. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார்க கோட்டி கொளல். பொருள். அவையறிதல் (720) பரி : அங்கணம்-முற்றம் பாவா : அங்கணம் - சாய்க்கடை, சாலகம்

நானென வொன்றோ வறியலம் காமத்தாற் பேணியார் பெட்ட செயின் காமம்-நிறையழிதல்.1257 பரி : பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் நீ புலவாமைக்குக் காரணம் யாதென்ற தோழிக்குச் சொல்லியது. பாவா : பரத்தையின் பிரிந்து வந்தவனாகக் கருதப் பட்ட தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகளை, நோக்கி நீ புலவாமைக்குக் கரணியம் யாதென்ற தோழிக்குச் சொல்லியது.

4 உரையாசிரியர்

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பருதி பரிமே லழகர் - திருமலையர் மல்லர் பரிப் பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற் கெல்லையுரை செய்தார் இவர்

- தனிப்பாடல்