பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௩௬

முன்னுரைபெருமைப்பட விரித்துரைத்து வியந்து மகிழ்தற்கு இவ்வுரைச் சுருக்கத்துள் விரிவான இடங்களுள! அந்நிலை, நூலுட் புகப் புகப் புலனாகும்!

கொழுந்தமிழ் எண்மையொடு குழந்தைப் பாடல்களையெல்லாம் கொழிக்க வெளிப்படுத்தவல்ல திறஞ்சான்ற நம் ஐயா அவர்களால் அதே வண்ண எளிய நடையில் இதனையும் எளிதே ஆக்கிப் படைக்க இயலுமெனினும் இதனை அவ்வாறு ஆற்றாது இவ்வாறாகிய திறச்செறிவு நடையில் தீட்டியிருப்பதற்குரிய காரணம், பொருளுக்கேற்ற புலநடையிற் புறம்படுத்தலே பொருந்தியதாமென்று புலந்தெளிந்ததால் - என்க!

வயிரத்தை அளமியத்திற் (Aluminium) பதித்தல் போன்ற பொருத்தமற்றது - அவ்வெளிய நடையில் உரைப்படுத்தலாகிய செயல்: வயிரம் பொன்னிற் பதிவுறலினும் தூயதங்கத்தில் பதிவுறலிலேயே ஒளி துலங்கி அழகிலங்குவதாகும்! அப் போன்மைப் பான்மை - இவ்வுரையிற் பிறங்குதலை அறிவார் அறிவர்!

அனைத்தையும் உலகியலுண்மைகளோடும் தம் சொந்தப் பட்டறிவுகளோடும் பொருந்த எண்ணிப்பார்த்து இதற்குரியனவாகப் பலர்பலரால் இதுகாறும் (கடை விரித்துப் பரப்பப் பெற்றுள்ள பல்வேறு உரைத்தெறிப்புகளையெல்லாம் தம் புலத்தில் உள்வாங்கிக்கொண்டு, சிலவற்றை விளைவுக்கே எவ்வகையிலும் தகாதனவெனத் தெள்ளிப் புறந் தள்ளியவராய், உரிய நெற்று மணிகளிற் சிலவற்றை மட்டும் தேர்ந்து தெளிந்து ஏற்றுக் கொண்டு, சிலவற்றைத் தம் புல வினைக்கு உரமாகவே இட்டுக் கொண்டு, நேரிய மணியை நிரல்படக் கோத்தவாறு -சீரிய செழுமிய எழிலியை ஏற்றச் சொன்மணிகளை இவ்வுரை நூலில் கோத்தமைத்துள்ள கொழுமையழகு - தனீஇப் பொலிவுடையதாயுள்ளது! உண்மை உரைகல்லில் உரைத்துப் பார்த்து உரைத்துள்ள உயர்ந்த பொன்னுரைகள் இவை!

ஆரியவியல் கொள்கைகளாக எங்கெங்கெல்லாம்? முன்னைய?அண்மைய உரையாசிரியர்கள் பலரின் உரையிடங்களில் பதிவிடப் பெற்றுள்ளனவோ - அங்கெங்கெல்லாம் ஆர அமரத் தங்கிநின்று அவற்றை முறையுற மறுத்து, உரிய உண்மைகளை நிலைநாட்டிச் செல்லும்போக்கு, தமக்கே ஆசிரியத் தகைமை சான்றவராயிருந்த பைந்தமிழ்ப்பாவாணர் அவர்கள் - பரிமேலழகரைப் பின்பற்றிச் சறுக்கியவாறு உரை வரைந்துள்ள இடங்களிலெல்லாம் தாம் ஒருபாற் கோடாமலும் கண்ணோட்டம் நோடாதும்