பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௪௬

முன்னுரை




இதை அவரவர் அறிவு வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும், இயல்பு நிலைகளுக்குகொண்டிருந்ததால், மாற்றினத்தவர்களால் அதை அழிக்க முடியவில்லை."

இனி, இவ்வுரை நூலுள் நாம் கையாண்ட நடை பற்றி ஒரு விளக்கம் இங்குத் தரவேண்டியுள்ளது.

இந்நூலின் முதற்பகுதி எழுதி முடிக்கப் பெற்ற பின் அதிலிருந்து ஒரு பத்து குறளுரைகளை நாம் நம் தென்மொழி இதழில் வெளியிட்டு, இவ்வுரையின் சிறப்பியல்களைத் தமிழறிஞர்களும் தமிழன்பர்களும் அறிந்து இதன் வெளியீட்டுக்கு உதவுமாறு ஒர் அறிவிப்பு தந்திருந்தோம். தென்மொழி; சுவடி : 26; ஒலை 8) அவ்வுரைப் பகுதியைக் கண்ட அன்பர்கள் சிலர், "மெய்ப்பொருள் உரையின் நடையை இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தி வெளியிட வேண்டும்” என்றும், அவ்வகையில் நாம் இதழ்களில் கையாளும் மூவகை நடைகளைக் குறிப்பிட்டுத் தென்மொழி இதழ் நடையிலிருந்து சற்று இறங்கித் தமிழ்நிலம் இதழ் நடையிலோ, அல்லது இன்னும் எல்லாரும் எளிதாக அறிய உதவும் வகையில் தமிழ்ச்சிட்டு இதழ் நடையிலோ மேற்படி மெய்ப் பொருள் உரை அமையுமானால், வளரும் இளைய தலைமுறையாம் மாணவர்கள் முதல் மற்ற எல்லாரும் பயன்படுத்த பெரும் வாய்ப்பாய் அமையும்" என்றும், 'மேலும் கூறவேண்டுமானால், உரைகளிலேயே பரிமேலழகர் உரை சிறந்தது என்று பலரும் கூறுவர். (கருத்து வேறுபாடும் உண்டு. இருப்பினும் அதனையே குறள்போல் இன்னொருவர் மூலம் விளக்கக் கேட்டால்தான் மாணவர்கள் நிலையில் உள்ள மற்றவர்களும் புரிந்து கொள்ள இயலும், எண்ணிப் பாருங்கள் என்றும் வேண்டி விரும்பி எழுதியிருந்தனர். தென்மொழி சுவடி 26, ஒலை:9).

அதற்கு விடையாகப் பின்வருமாறு நாம் விளக்கம் தந்திருந்தோம். மேற் குறிப்பிட்ட இதழ்)

"நூலின் பொருள் உயர்ச்சிக்குத் தகுந்த உரைநடையே பொருந்துவது; வையிரத்தைத் தங்கத்தில் தான் பதிக்க வேண்டும் வெள்ளியில் கூட பதியார். அவ்வாறு பதிப்பது வையிரத்தின் பெருமைக்குக் குறைவு செய்வது போல் ஆகும்! மொழியறிவு வேறு கருத்தறிவு வேறு. கருத்துக் கேற்ப நடை அமைவதுதான் சிறப்பு எளிமை எளிமை என்றுதான் நாம் தெருநிலைக்குத் தாழ்த்திவிட்டோம். எதிரிகளும் இதையே வாயப்பாகக் கருதித் தமிழை நாள்தோறும் மேலும் மேலும் தாழ்த்திக் கல்லாதார் மொழியாக-தாழ்த்தப்பட்ட மொழியாக-சூத்திரர் மொழியாக இழிவுப்படுத்தி வருகிறார்கள். தமிழ் அளப்பரிய வளமும் செழுமையும் உயர்ச்சியும் கொண்டிருந்ததால், மாற்றினத்தவர்களால் அதை அழிக்க முடியவில்லை."