பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௲௧


- இதனை மிகுதியும் ஆனாளுமைத் தன்மையும் நோக்கிக் கூறினார் போலும்.

- இவ்வதிகாரத்துள் பெண்ணைப் 'பிறன் பொருள்', 'பிறனியலாள்', 'பிறற்குரியாள்', 'பிறன்வரையாள்' என்று கூறுவதிலும் ஆண்மை உயர்த்தப் பெறுகிறது, காண்க.

9) நூல் நெடுகலும், அனைத்துக் கருத்துகளிலும் ஆணையே முன்வைத்துக் கூறுதல்.

செப்பம் உடையவன் ஆக்கம் (112), நன்றிக்கண் தங்கியான் (117), நிலையில் திரியாது அடங்கியான் (124), கற்றடங்கல் ஆற்றுவான் (130), அழுக்காறுடையான் (135), அறனாக்கம் வேண்டாதான் (163), கொடுப்பது அழுக்கறுப்பான் (166), அழுக்காறுடையான் (167), அவ்விய நெஞ்சத்தான், செவ்வியான் (169), ஆற்றின்கண் நின்றான் (176), அறங்கூறான், புறங்கூறான்.(181), அறஞ் சொல்லும் நெஞ்சத்தான் (185), பிறன் பழி கூறுவான். (186), புன்சொல் உரைப்பான் (189), பயனில சொல்லுவான் (191), நயனிலன் (193), பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல் (196), தன்னை அடல் வேண்டாதான் (206), தன்னைத்தான் காதலனாயின் (209), அருங்கேடன், தீவினை செய்வான்(210), ஒத்ததறிவான், உயிர்வாழ்வான், மற்றையான் (214), பேரறிவாளன் (215), நயனுடையான் (216), பெருந்தகையான் (217), அஃதொருவன் (220), குலனுடையான் (223), - முதலிய நூற்றுக்கணக்கான இடங்கள்.

இவ்வாறின்றிக் கருத்துகளை ஆண்பால் சார்ந்தனவாகக் கூறாமல்,பொதுப்பால் (பலர்பால்) சார்ந்து கூறுகிற முறையும் நூலாசிரியரிடம் உண்டு எண்க. அவற்றுள் சில வருமாறு:

குழலினிது யாழினிது என்ப (66), அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (72), இன்புற்றார் (75), அறியார் (76), அன்பிலவர்க்கு (79), உதவி செயப்பட்டார் (105), துன்பத்துள் துப்பாயார் (106), விழுமம் துடைத்தவர் (107), அவர் செய்த ஒன்று (109), தக்கார் தகவிலர் - அவரவர் (114), யாகாவாராயினும், சோகாப்பர் (127), உரவோர்(136), ஒழுக்கம் உடையவர் (139), அறிவிலாதார் (140), அகழ்வார், இகழ்வார் (151), ஒறுத்தாரை, பொறுத்தாரை, வையாரோ, வைப்பர் (155), தற்பிறர் (157), தூய்மை உடையர், நோற்கிற்பவர் (159), அகன்றார், இல்லார் (170), செய்யார் - (172, 173, 174), அறிவுடையார் (179), துன்னியார், ஏதிலார் (188), நட்டார் (192), நீர்மையுடையார் (195), சான்றோர் (197), அறிவினார் (198), மாசறு காட்சியவர் (199), விழுமியார் (201), தீயவை செய்தார் (208), ஆற்றுவார், மாற்றுவார் (225), போலும் நூற்றுக் கணக்கானவை.

- இவ்விரண்டு கடைப்பிடிகளையும் உற்றுநோக்குங்கால், உயர்வுத்