பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 அ - 1 -2 - வான்சிறப்பு -2

உணவு தாயினது பாலே யாகலின், அதுவே உயிர்க்கு மருந்தும் சாவைத் தடுப்பதும் ஆகும். பறவையினத்திற்கும் அது போல் பிறவற்றிற்கும் தாய்ப்பாலைப் போலும் ஊட்ட நீர் முட்டையிலேயே உள்ளதென்க. - அமிழ்தம் (உயிரைத் தருவது என்னும் சொல்லினின்றே வடநூலார் 'அமிழ்தம் (மிர்து-சாவு, மிர்தம் சாவைத் தருவது, அமிர்தம் - சாவைத் தடுப்பது என்னும் சாவா மருந்தைக் கற்பனை செய்து கொண்டனர் என்க.

இவ்வுலகின்கண் அப்படி ஒரு மருந்து இன்மையால் விண்ணுலகத்தில் அங்குள்ள தேவர்களுக்கு - உணவாக இருப்பதென்பதும் அவர்களது கற்பனையே யாகும். 4. வழங்குதல் என்னும் சொல்லால், வழங்கு பொருள் வானாகவும், வழங்கப்பெறும் பொருள் மழையாகவும், வழங்கப்பெறுவது உலகமாகவும் ஆயின. ஆகவே, வானாகிய தாயும், உலகாகிய மகவும், மழையாகிய தாயமிழ்தும் உருவகமாயின. 5. என்றுணரற் பாற்று - என்று உணர்தல்பாலது - என்றது அறிவால் அறியப் பெறுதல் மட்டுமன்றி, உணர்வாலும் நன்றி கருதலும் வேண்டி என்க. - இவ்வுணர்வைச் செய்யாமற் செய்த உதவி (0), கைம்மாறு வேண்டா கடப்பாடு (21) என்னும் பாக்களாலும் உறுதிப் படுத்தினார் என்க. - உணரற் பாற்று - உணரற் பால்+அது - பாலது. பால்+அது -

பால்+து - பாற்று. 6. இறைமையின் அறமுதலின் மூன்றாவது கூறாகிய மழையின்றேல் உலக உயிர்களும் விளைவுகளும் இல்லை என்று உணர்த்தினார். இதன்வழி, அறவுணர்வின் தன்மையையும் தாய்மை உணர்வு போல் மக்கட்குத் தானே செய்யும் தண்ணளி போன்ற உணர்வையும் - விளக்கினார் என்க. - 7. இறைமைக்கும் உலகிற்கும் உள்ள மூன்றாம் தொடர்பு இதனால்

உணர்த்தப் பெற்றது.

Ꮬa. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை 督2

பொருள் கோள் முறை : இயல்பு