பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

88


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 88.

பொழிப்புரை ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாக உள்ள உலகுவாழ் உயிரினங்கள் அனைத்துக்கும், அவையவற்றிற்கும், அவரவர்களுக்கும், அவ்வவ்விடத்துக் கும், அவ்வக்காலத்திற்கும் ஏற்ற வகையான உணவு, உடை, உறையுள் முதலிய துய்ப்புப் பொருளாகிய அனைத்தையும் உண்டாக்கிக் கொடுத்தும், அவ்வாறு உண்பவர்களுக்குத் தானும் உண்ணப்படும் நீர் எனும் வகையில் ஓர் உணவாகி நிற்பதும் மழையே ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1.

துப்பு - துய்ப்பு (அநுபவம் துப்பு துய்ப்பு ( துகர்வு ப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் குறிக்கும். என்னை? அரக்கும் பவளமும் ஆயுதப் பொதுவும் துணையும் வலியும் பொலிவும் நெய்யும் அனுபவமும் துய்மையும் துப்புஎன லாகும்.

- பிங்கலந்தை அற்றைப் பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர், பரிப்பெருமாள் முதல் இற்றைப் பாவாணர் உள்ளிட்ட அனைத்து உரையாசிரியர்களும் துப்பு என்பதற்கு உணவு' என்று மட்டுமே பொருள் கொண்டுள்ளது குறையுரையாகும். துப்பு என்பது நுகர்ச்சி - துய்ப்புப் பொருள்கள் அனைத்தையும் குறிக்கும் ஒரு சொல் என்பதை உணர்தல் வேண்டும். - மழை வெறும் உணவுப் பொருள்களை மட்டும் உருவாக்கித் தரவில்லை; அதற்கு மட்டும் அது காரணமாக அமையவில்லை. அனல் உலகைப் புனல் உலகமாக மாற்றி, உயிர் வாழ்க்கைக்குரிய உலகமாக இதை உருவாக்கியதும், இதில் உலவுகின்ற அத்தனை உயிர்களும் உருவாகக் காரணமாகியதும்; அவ்வுயிர்கள் தம்மை நிலை நிறுத்திக் கொள்ளவும், வாழவும் ஆன அனைத்து நுகர்வுப் பொருள்களாகிய உணவு, உறையுள் மக்களுக்கு வேண்டிய உடைகள் முதலிய அனைத்தும் உருவாகுவதற்கு மூலப் பொருளாக நின்றதும், அதன் பின் இறுதியில் தானும் ஓர் துய்ப்புணவான நீர் ஆகி நிற்பதும் மழையே என்க. இச் செய்யுளின்கண் வெறும் உணவாக்கம் மட்டுமே கூறப் பெறாமல், படைப்பாக்கம் அனைத்தும் கூறப்பெற்றிருப்பதை உய்த்துணர்க. என்னை?

துப்பு ஆய துப்பு ஆக்கி என்பதில் உலகின் அனைததுப்