பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 அ - 1 -2 - வான்சிறப்பு -2

2. வளம் குன்றுதல் - வழங்கப்பெறும் அளவு குறைதல், இஃது அறவே

இல்லாமற் போதலன்று. 3. மழை போதிய அளவின் குறைந்து பெய்யுமானால், அதன்வழி நிலத்தை உழுது வேளாண்மை செய்யும் உணவுப் பயிர் ஆக்கம் நிகழாது போகும். போகவே உணவுத் தட்டுப்பாடு நேரும். 4. உழவர் - உழு என்னும் வேரடியாகப் பிறந்த சொல். உழு - உழவு - உழவர் உழு உழுவர் - உழவர் என்றும் கொள்ளலாம். உழு' என்னும் வேரடியாகவே உழை என்னும் சொல் தோன்றி உழைப்பு என்னும் ஊக்க முயற்சியையும் அது தொடர் பாய்ப் பிறபணிகளையும் குறித்த தென்க. - தமிழில் உள்ள உழைப்புத் தொடர்பான அனைத்துச் சொற்களும் உழவுத் தொடர்பான சொற்களே என்பது இங்குக் கவனிக்கத்தக்கது. 'உழைப்பு தவிர வேறு சொற்கள். தொழில் தொள் - தொடு பறி தொண்டு - தோண்டு. தொள் - தொளில் - தொழில் சிறப்பு ழகரம் பெற்றுத் தனிப் பெயராக நின்றது) பணி - பள் - பள்ளம் (விதைக்கப் பள்ளம் செய்தல்) பள் பள்ளு உழவு பள்ளர் உழவர் பண் - பண்ணை - உழவு பண் - பண்ணுதல் செய்தல் பண் - பணி

வினை விளை - வெளை - வேளை - வேள் - வேளிர் வேள் - வேளாண்மை - வேளாளர்.

வேளை - வேலை. விளை - வினை (செயல்) செயல் செய் - வயல், நன்செய், புன்செய், செய் - செய்தல் நிலத்தைப் பண்படுத்தல் - விளைவுக்குரியதாக ஆக்குதல். ஆற்றுதல் - ஆற்று நீரை விளைவுக்குப் பாய்ச்சுதல் (வயல்கள் ஆற்று ஓரங்களிலும், ஏரிகளைச் சுற்றியுமே இருந்தன. ஏரி ஏருக்கு உதவுகிற நீர்த் தேக்கம். - இவ்வாறு செய்தல். - 5. இதனால் நிலம் தன் மேல் விளைவு இல்லாமல் வறட்சி எய்தும்

என்றார். உழார் என்பதை ஏரின் உழார் என்று மிகுத்துக் கூறியது, நிலம் ஏருக்குரியவாறு நனைந்து பதப்பட்டிருக்காது என்பதை உள்ளடக்கிக் கூறியதாம் என்க. குன்றியக்கால் என்றது குன்றிக்