பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

அ - 1 -2 - வான்சிறப்பு -2

பெரியோரும் சிறியோரும், அறவோரும் துறவோரும், கற்றோரும் மற்றோரும், உள்ளோரும் இல்லாரும் எனும் யாவர்க்கும் அவரவர்க்குரிய நடைமுறைகள் அமையாமல் போகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

  1. .

அமையாது : உலகமும் அதிலுள்ள உயிர்களும் இக்கால் உள்ள இயற்கையாந் தன்மையில் அமைந்திரா, அஃதாவது நிலைத்திரா. அமைதல் உள்ளது நிலைத்தல்; அமையாமை - உள்ளது நிலை யாமற் போதல். .

2. உலகு : உலகும் அதிலுள்ள இயற்கையும் செயற்கையும்.

3.

4.

ஒழுக்கு : உலகியல் நடைமுறை, ஒழுகல் தன்மை. யார் யார்க்கும் : மக்களுள் பல படிநிலையில் உள்ளவர்க்கும்; பிற அனைத்துயிரியக்கக் கூறுகளுக்கும்.

5. உலகு என்றது. உலகியலை ஒழுக்கு என்றது ஒழுக்கத்தை உலகியல்

- பொதுமாந்த நடைமுறை ஒழுக்கம் - தனிமாந்த நடைமுறை. பொதுமாந்த நடைமுறைக்கு நீர் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது தனிமாந்த ஒழுக்கத்திற்கும் என்றார். உலகியல் நடைமுறைகளாவன, அரசமைப்புகள், நாட்டமைப்புகள், மக்கட் பிரிவுகள், அவர்களின் அறிவாக்க வாழ்வியல் நிலைகள், அறநிலைகள், துய்ப்பு நிலைகள் முதலிய அனைத்தும் என்க. மேலும் வான் என்பது மழை என்னும் பொருளில் மட்டும் அடங்குவதன்று. வானின்று வரும் வெயிலும், காற்றியக்கமும், வேறு பல அண்ட வெளி இயக்கங்களும், இன்னும் பல அறிவியல் கூறுகளான வேதியற் பொருள்களும் பிறவுமாகும். நீரில்லாமல் உயிர் உலகம் இல்லை என்னும் அறிவியல் உண்மையை வெளிப்படுத்தினர் என்க. எனவே நீரில்லாப் பிற கோள் உலகங்களில் உயிரியக்கம் இல்லை என்றதுமாம்.

மழை இன்றெனின் உலகின் இயற்கையும் செயற்கையும் திரிபுற்று

நிலையிழந்து போகும். பின்னர் உயிர்களும் அவற்றுட் சிறந்த மக்களும் அவர்களுள் பல்வேறு நிலையினரும் தாமே அமைந்த அமைத்துக் கொண்ட உலகியல் நடைமுறைகளும் படிப்படியாய்ச் சிதைவுற்று அழிந்து போகும். உலகமே அமையாதென்றவர், மீண்டும் உலகின் கண்ணுள்ள மாந்தர்க்கு ஒழுக்கம் அமையாது என்று வேண்டாது கூறியது . ஏன் எனில், உலகின்கண் ஒரோவிடத்துப் பெய்த நீர்,