பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ - 1 - 3 - நீத்தார் பெருமை - 3

என்று பொருள் கண்டு, ஓர் என்னும் சொற்குப் பொருள் காணாதது குறை. ஒர் ஒர் ஐந்தும் (ஒவ்வோர் ஐந்தும்) என்பது ஒரைந்தும் என்று மருவி நின்றது.

3. காப்பான் - தேவையில்லாதவிடத்து, அப்பொறிகளை அறிவென்னும்

கதவால் அடைத்துக் காப்பான். நல்ல நோக்கத்திற்குச் செயல்படுமாறு பொறிகளைத் திறந்து, அல்ல நோக்கத்திற்குச் செல்லுங்கால் அடைத்துக் காக்க வேண்டுவது அறிவு என்றார். சென்ற விடத்தான் என்னும் குறளிலும் (422) இக்கருத்தை வலியுறுத்துவார். இனி ஐம்பொறிகளை அவிப்பது (), (694), அடக்குவது (125 முதலிய நிலைகள், அவற்றைத் தீது ஒரீஇ நன்றின் பால் உய்த்துக் காப்பதை' உணர்த்துமேயின்றி, அவற்றின் உணர்வுகளையும் இயக்கங்களையும் அறவே நீக்கி அல்லது ஒழித்து விடுதலையன்று. என்னை? அவையில்லா உடலியக்கம் ஏது என்க. ஐம்பொறிகளை நற்பயன் நோக்கிச் செலுத்தியும், தீப்பயன்.நோக்கிச் செலுத்தாமலும், அவ்வப்பொழுது அறிவுத்தடை கொண்டு காத்துக் கொள்ளும் ஒருவன், தன் அறநோக்கத்துச் சிறந்து நிற்பானாகலின் அவனின் விளைவுகளே எதிர்வரும் மக்களினத்துக்குப் பயன்படும் என்றார். வரன் - வரல் - எதிர்த்து வரவிருக்கும் காலம். எதிர்காலம் ன், ல் போலி (வரல் + ஆறு - வரலாறு இச் சொல் மிகப் பிந்தியது எனினும் ஆசிரியர் காலத்து வரல் என்னும் சொல்லே வரலாறு குறித்ததாதல் வேண்டும்) இனி வரன் என்பதற்கு மேல் என்றும், மேலுலகம் என்றும் பரிமேலழகர் பொருந்தாப் பொருள் கூறினார். அவரையடுத்த பிறர் பலரும் வழிமொழிந்தார். பாவாணரோ புரம்.மேல்; புரம் - பரம் - வரம் - வரன் - மேலுலகம், வீட்டுலகம் என்று பரிமேலழகர்க்கு இட்டுக்கட்டி அரண் செய்தார். வைப்பு - எய்ப்பில் வைப்பு - சேமிப்பு. எதிர்காலத்திற்குப் பயன் பெறுவதற்காகச் சேமித்து வைப்பது பணங்காசாகவும், பொன்பொருளாகவும், தவசங்களாகவும், கூலங்களாகவும் (பருப்பு முதலிய தின்பொருள்கள்) (தானியங்களாகவும், அரிசி முதலிய உண்பொருள்கள் அருங்குவையாகவும், விளைவித்துகளாகவும் ஆகலாம். இங்கு ஒரைந்தும் காத்து அறவொழுக்கம் பூண்டவன் எதிர்காலப் பயனுக்கு நல்ல விதை போன்றவன் என்பார். ஓர் வித்து - நல்லதொரு விதை தேர்ந்தெடுத்து வைக்கப்பெற்ற ஒரே நல்விதை பிற பொருள்கள் சேமித்த அவ்வளவில் பயன்