பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 அ 1-4-அறன் வலியுறுத்தல் 4

மாந்தநிலை (Super humanism) மலர்ச்சியுறுதல் இன்றியமையாதது என்று ஆய்ந்து கண்டு அப்பொதுமை நலக்கூறுகளுக்கென ஒட்டுமொத்தமான ஒரு தொகுதிப் பெயரை உருவாக்கி, அதற்கு 'அறம்' எனப் பெயரிட்டு, அவ்வறவுணர்வு அவர்களிடைக் கட்டாயம் வளர்தல் வேண்டி வலியுறுத்தினர் என்க.

இஃது, உலக வாழ்வின் இயங்கியல் கூறுகளான அறமுதலுணர்தல், வான் சிறப்புணர்தல், நீத்தார் பெருமையுணர்தல் ஆகியன போன்றே, அறவுணர்வும் அவற்றையடுத்து, மக்கள் உணர்ந்தும் கடைப்பிடித்தும் ஒழுக வேண்டிய இன்றியமையாக் கூறு ஆகலின், இவ்வதிகாரத்து அதனையும் புலப்படுத்தி வலியுறுத்துவார் என்க. எனவே, இஃது அறன்வலியுறுத்தல் ஆயிற்று. :

இவ் வறம் என்பது, ஆரிய நூல்களுள் தர்மம் (Dharma) என்று கூறப்பெற்று, அவர்தம் வண்ண (வர்ண வொழுக்கங்களுக்கேற்பப் பொருளுரைக்கப்பெற்றுச் செயல்களும், அவ்வச் சாதிப் பிரிவினர்க் கேற்ப வகுத்துரைக்கப்பெற்றன வாகலின், பரிமேலழகர் முதலிய ஆரிய வழி உரையாசிரியர்களும், அவரைத் தழுவிய பிறரும், அத் தர்மக் கோட்பாடுகளையே, தமிழியலின் மேம்பட்ட பொதுமைக் கூறாகிய இவ்வறவியல் கூறுக்குப் பொருளாக வலிந்துரைத்தனர் என்க. இவ் வேறுபாட்டினைப் பின்னர் விளக்குவாம்.

Dharma

- virtue, moral and religious merit according to the shastras. - any charitable or meritorious act from which future good is expected.

- peculiar or prescribed duty, occupation etc. according to the different ranks and classes in society - as giving alms etc. by the house holder; administrating justice, by kings; piety and perfoming rites by brahmins; courage, bravery in the soldier; shaving in the barber.

- சாதிக்குரிய கருமம்.

(M. Winslow and by Sir. Monier Williams) - இவ்வாறான ஆரிய தர்மங்களை உரைக்கும் நூல்கள் ஸ்மிருதிகள் எனப் பெறுவன. அவற்றை வகுத்துரைத்த நூல்கள் அந் நூலாசிரியர்கள் பெயர்களால் வழங்குகின்றன. அவை பத்தொன்பது. அவையாவன: மனு, ஆத்ரேயம், ஒளரிதம், விஷ்ணு, யாஜ்ஞவல்கியம், உசனம், ஆங்கீர்சம், யமம், ஆபஸ்தம்பம், சம்வர்த்தம், காத்தியாயனம், பிரகஸ்பதியம், பராசரம், வியாசம், சங்கலிதம், தஷம், கெளதமம், சாதான்மம், வாசிட்டம்