பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

128


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் #28

ஆகியன. இவற்றுள் சங்கலிதத்தைப் பொதுவாகக்கொண்டு பதினெட்டு என்றும் கூறுவர். இவையில்லாமல், துணை (உப) ஸ்மிருதிகள் பதினெட்டாகக் கண்வ, கபில, லோஹித, தேவல, லோகாகடி, முதலியவையும் கூறப்பெறுகின்றன. இவை சில நூல்களில் முறை மாறியும் எண்ணப் பெறுகின்றன.

இவற்றுள், மனுஸ்மிர்தி முதல் யுகமாகிய கிரேதாயுகத்திலும், கெளதமஸ்மிாதி இரண்டாவது யுகமாகிய திரேதாயுகத்திலும், சங்கலிதஸ்மிர்தி மூன்றாவது யுகமாகிய துவாபரயுகத்திலும், பராசரஸ்மிர்தி நான்காவது யுகமாகிய கலியுகத்திலும் சிறப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியனவாகும் என்றும் குறிப்பிடப்பெறுகின்றன.

- இனி, ஆரியவியலின்படி, துளசிதாசர் இராமாயணத்தில் இன்னொரு கருத்தும் கூறப்பெற்றுள்ளது. அஃதாவது:

ஆயிரம் பேரிளில் ஒருவனே தர்மத்தைப் பின்பற்றித் தர்மாத்மாவாக விளங்குகிறானாம். அப்படிப்பட்ட கோடி தர்மாத்மாக்களில் ஒருவனே புலன்கள் ஆசையை வெறுத்து வைராக்கியம் உள்ளவனாக இருக்கின்றானாம். அவ்வாறான கோடிப் பேர்களில் ஒருவன்தான் மெய்யறிஞனாக (ஞானஸ்தனாக விளங்குகிறானாம்.

இத்தகைய மெய்யறிவாளர்கள் கோடிப் பேர்களில் ஒருவன்தான் 'சீவன் முத்தர்கள் பிரம்மத்தில் லயமானவர்கள் ஆகியவர்கள் கிடைத்தாலும் கிடைக்கலாமாம். ஆனால் உண்மையான ஒர் இராமபக்தன் கிடைப்பது மிகவும் அரிதாம்.

- இவ்வாறு துளசிதாசர் இராமாயணம் கூறுவது ஆரியவியலின் கருத்துப்படி தர்ம நடைமுறைகள் எல்லாம், மாந்த நன்மைக்காக அல்ல; இறைவனை அடையவே என்பதுதான். தமிழியல் அறத்திற்கு மக்கள் நன்மையே முகாமையானது என்க.

இனி, முற்கூறப்பட்ட ஆரிய தர்ம நூல்களிலெல்லாம் தர்மக் கூறுகள் ஆசாரம் (ஒழுக்கம், விவகாரம் (வழக்கு, பிராயச்சித்தம் (தண்டம்) என முப்பிரிவுகளாகக் கூறப்பெற்றுள்ளன.

அவ்வொழுக்க (ஆசார முறைகளில் பொதுவாகக் கூறப்பெறும் 'தர்மங்கள் முப்பத்திரண்டாம். அவை வருமாறு:

க. ஆதுலர்க்குச் சாலை : ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தல், உ ஒதுவார்க் குணவு : கல்வி கற்பார்க்கு உறையுளும் உண்டியும்

க. அறுசமயத்தார்க்குண்டி நடைமுறையில் உள்ள ஆறு சமயத்தை (மதத்தைச் சார்ந்தவர்களுக்கு உண்டியும் உறையுளும் தந்து பேணுதல்