பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#41 அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

நிலை உருவாக எவரும் காரணமாக விருத்தல் கூடாதென்றார்.

ஒவ்வொரு மனமும் பிறர் மனங்களோடு தொடர்பு கொண்டுள்ளது என்பது மெய்யறிவியல் உண்மையும் அறிவியல் உண்மையும் ஆகும். ‘Each mind is a part of the universal mind. Each mind is connected with

every other mind. Therefore, each mind is an actual communication with the whole mind'.

- Swami Vivekanandha's Lecture at Los Angeles-8th Jan. 1900. பேரண்ட மனத்துடன் தொடர்புகொண்டு இயங்குவது நம் மனம். இவற்றின் விரிவு விளக்கமெல்லாம் எம் நிறைவுரை யில் இடம்பெறும். இதனால் மெய்யான அறவுணர்வும், பொய்யான அறவுணர்வும் பிரித்துக் காட்டப்பெற்றன என்க. -

O

கரு அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். 35

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை : அடுத்தவர்மேல் கொள்ளுகின்ற பொறாமை, அதன்வழித்

தோன்றுகின்ற ஆசை. அது நிறைவேறாத விடத்து, மனம் முழுவதும்

எப்பொழுதும் அளாவி நிற்கின்ற சினம், அதன் விளைவாகப் பிறக்கின்ற

கடுமையான, கொடிய சொற்கள் ஆகிய இவை நான்காலும் இழுக்குப்

படாமல் இயங்குகின்ற நல்லுணர்வே அறமாகிய பொதுநல வுணர்வு.

சில விளக்கக் குறிப்புகள் : .

இதற்கு முந்தைய குறளில், மனத்துக்கண் மாசு இல்லாமல் இருப்பது அறம் என்றவர், அம்மனத்தில் தோன்றும் மாசுகளை இதில் கூறினார். - -

2. அழுக்காறு - குற்றமான போக்கு பிறர் நலன்கள் கண்டு, பொறுத்துக்

கொள்ளாமை - பொறாமை, மனத்தில் ஏற்படும் முதல் குற்றமே பொறாமைதான். இதுவே மனத்தின் பிற தவறான உணர்வுகளுக்கு அடிப்படையாக உள்ளது என்பதால், இதை முதலில் கூறினார். -