பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

142


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 142

3. அவா 'அவ்' என்னும் வேரடியாகப் பிறந்த சொல். அவ்வுதல் . ஒன்றைப் பற்றுதல் மனம் ஒன்றிலேயே பற்றுக் கொண்டு, அதிலேயே அழுந்தி நிற்றல் அவா ஆகும். அழுந்திய முதிர்ந்த ஆசை அவா. - இஃது, அடுத்தவர்மேற் கொள்ளும் பொறாமையின் அடிப்படையில் எழுவது. அவர்க்கு உள்ளது தனக்கு வேண்டும் என்று அதன் மேல் செல்லும் மனவுணர்வு. இது மனத்தின் இரண்டாவது குற்றவுணர்வாகலின் அதன் பின் வைத்தார். 4. வெகுளி - மனம் முழுவதும் அளாவிக் கனன்று கொண்டிருக்கும் சினம். இஃது, ஆசை நிறைவேறாத விடத்துத் தோன்றும் மனவுணர்வாகலின் மூன்றாவது குற்றமாகக் கூறினார். 5. இன்னாச் சொல் - இனிய தல்லாத சொல். கடுஞ்சொல்; கொடுமையான சொல்; பிறர்க்குத் துன்பம் தரும் சொல். இது, பிறர்மேல் கொண்ட வெகுளியால் பிறப்பது - எனவே அடுத்துக் கூறினார். 6. இழுக்கா இயன்றது - மேற்கூறிய மனத்தின் குற்றவுணர்வுகள் நான்கினும்

இழுக்காமல் இயங்குவது. இழுக்காமல் இழுக்கி விடாமல். இழுக்குதல் - தவறுதல், வழுக்குதல், சறுக்குதல், முன் சென்ற நிலை

பின்னடைதல். - - 7. தூய்மையாகவும் குற்றமின்றியும் நேர்மையாகவும் இயங்க வேண்டிய பொது நலவுணர்வாகிய அறவுணர்வு, மனத்தில் ஏற்படும் அழுக்காறு முதலிய குற்றங்களால் பின்னடைந்து இழிவுபட்டுவிடாமல் இயங்குதல் வேண்டும் என்றார். ஒருவர் பொறாமை, ஆசை, வெகுளி, இன்னாச் சொல் முதலிய குற்றங்களை மனத்தில் வைத்துக்கொண்டு, அல்லது வளரவிட்டுக் கொண்டு, பொதுநல வுணர்வில் ஈடுபடல் இயலாது என்றார். 8. இஃது, அறவுணர்வுக் கேற்படும் அகத் தாக்கங்கள் இவை, என்றது.

ங்சு அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. - 36

பொருள் கோள் முறை : இயல்பு