பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 - அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

பொழிப்புரை நமக்குரிய வாழ்வியல் தேவைகளை நாம் நிறைவு செய்து கொண்டு, இவ்வுலக நலன்களையும் இளமைக் காலத் துய்ப்புகளையும், நுகர்ச்சி பெற்றுப் பின்) முதுமையுற்ற காலத்தில் அப் பொது நல வுணர்வாகிய அறத்தைப் பற்றி அறிந்து, அதில் ஈடுபடலாம் என்று கருதாமல், (அறிவுணர்வும், உள்ளத்தின் ஊக்கமும், உடல் வலியும் உள்ள) இன்றே, அவ் வற முயற்சிகளை மேற்கொண்டு செய்க. (ஏனெனில் அது நமக்கு மகிழ்வு தரக்கூடிய கடமை மட்டுமன்றி நாம் எதிர்பாரா வகையில், கேடடைந்து, தாழ்ச்சியுறுங்கால், நம்மைக் காத்து நிற்கின்ற துணையும் ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. அன்றறிவாம் என்னாது அறம் செய்க:

இளமைக் காலத்து, வாழ்க்கைக்கு வேண்டிய பொருள் தேடலும், மணமேற் கொண்டு இல்லறம் நடத்ததுதலும், வாழ்வைத் துய்த்தலும் ஆகிய கடமைகளும், துய்ப்பும் உளவாகையால், பிற்காலத்து அறத்தைச் செய்துகொள்ளலாம் என்னாது, ஒன்றே செய்க, அதுவும் நன்றே செய்க, அதுவும் இன்றே செய்க, அதுவும் இன்னே செய்க - என்றவாறு அறம் நன்றெனத் தெளிந்த போதே ஆற்றத் தொடங்குக - என்றார் என்னை?

'மற்றறிவாம் நல்வினையாம் இளையம் என்னாது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு.

- நாலடி 19

4. யாதும் கரவன்மின் கைத்துண்டாம் போழ்து

- - நாலடி. 92

ஆங்குத்தாம் - போற்றிப் புனைந்த உடம்பும் பயனின்றே கூற்றம்கொண் டோடும் பொழுது.'

- நாலடி. 120

ஒரும்ஜம் பொறியும் ஓம்பி உளபகல் கழிந்த பின்றைக் கூர்ளி கவரும் போழ்தில் கூடுமோ குறித்த வெல்லாம்

- சீவக சிந், 377