பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 அ - 2 -1 -இல்லறவியல் - 5

அ-2. இல்லறவியல் அ-2 இல்லறவியல் - 2 இயல் முன்னுரை:

அறம் எனப்பெறும் பொதுமை நலவுணர்வு, ஒருவர் உள்ளத்துத் தோன்றின், அதைச் செயல்படுத்த விரும்பும் ஒவ்வொருவரும், அதற்கெனச் சில வாழ்வியல் அடிப்படைகளை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும் . என்பது ஆசிரியர் கருத்தாகும். -

அவ் வடிப்படைகளுள் ஒன்றாவதும், தலையாவதும், அவரை அவ்வறவுனர் வில் கொண்டு செலுத்தவும், அதிற் பிழையாது நெகிழ்ச்சியின்றிக் காக்கவும், அதற்குத் துணை நிற்கவும், ஊக்கம் தரவும், அதே பொழுது, இயற்கையின் உயிரியக்கக் கோட்பாட்டின்படி, தாம் பெற்ற உடல், உள்ளம், அறிவு இவற்றின் உணர்வூற்றத்தை நிறைவு செய்வதற்கு வழியமைத்துக் கொடுக்கவும், உற்ற ஓர் உயிர்த் துணை, ஆணாகில் பெண்ணாகவும், பெண்ணாகில் ஆணாகவும் இருத்தல் வேண்டும் என்பதும், கவர்ச்சியுறு முனைமாற்றுக் காந்தவியல் தன்மையில் அமையும் அவ்விணைகூறு இல்லாவிடில், இயற்கையின் உயிரியக்கக் கோட்பாட்டில் குறை நேரும் என்பதும், அது நேருமாயின், இவ்வுலகத்துள் தான் வாழப் போகும் உயிருடல் வாழ்க்கை ஒரு பகுதியேயாகி, மறுபகுதி நிறைவுறாது, எவ்வகை உயிர் நிறைவும் துய்ப்பு முழுமையும் பெறாது போகும் என்பதும் ஆசிரியரின் அழுத்தமான உயிரியங்கியல் கொள்கையாம்

ΕΤΆ"ξ. . . . w . . -