பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

158


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 158

அக் கொள்கையின்படி, மக்கள் வாழ்வியலுக்கு இன்றியமையாத அறவியல் ஒழுகலாறுகளை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பகுப்புச் செய்து, ஆசிரியர் அவற்றின் முதலாவதும், இயற்கைக்குப் பொருந்தியதும், சிறந்ததும், இரண்டாவதாகிய அத் துறவறத்திற்கே ஆதரவும், அடிப்படையும் ஆகியதும், மக்களுக்கேயன்றி, இவ்வுலக உயிர்களுக்கெல்லாமும் பொதுவானதுமாகிய இல்லறவியலை முதற்கண் வைத்து, அது தொடர்பாகிய உட்கூறுகளை இருபது அதிகாரங்களாகப் பாகுபாடு செய்து, அவற்றை நிரல் நிறையாகவும், முறையாகவும், ஒன்றினோடொன்று தொடர்புடையதாகவும், இங்கு எடுத்துக் கூறப் புகுந்தார் என்க.

இல்லறம் ஒரு தேவையின் அடிப்படையில் நிகழ்த்துதல் வேண்டும். ஆசையின் அடிப்படையில் இருந்துவிடக் கூடாது. பிறர் வற்புறுத்தலுக்காகவோ, உலகியல் நடைமுறையை எண்ணியோ கூடத் திருமணம் செய்வது நன்றன்று. திருமணத்தின் இன்றியமையாத் தேவைகள் மூன்று. அவை, உடல் தேவை, மனத் தேவை, அறிவுத் தேவை ஆகும். அவற்றுள், - - 1. உடல் தேவை - இருபுறத்தும் உடல் உணர்வுகளை நிறைவு செய்வது; எனவே, கூடிய மட்டில் உடல் முழு நலமாகவும், வளமாகவும் சிதைவுறாத இளமையுணர்வுடனும் இருத்தல் வேண்டும். இவற்றின் குறை நிறையளவுக்குத் தக்கபடிதான் மணவாழ்வும் குறை நிறைவுடையதாக இருக்கும் என்பதை உறுதியாக எண்ணுக. இது நிறைவுற அமையவில்லையெனின் அடுத்த இரண்டினாலும்கூட, மணவுறவை ஈடுசெய்தல் அரிது என்க. 2. மனத் தேவை - இருவர் மனவுணர்வுகளையும், பகிர்ந்து கொள்ளவும், அவை பற்றி அறிந்து கொள்ளவும், இறுதியில் இரண்டையும் ஒன்றிக்கச் செய்வதுமாம். இதில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பினும் அதனை உடலீடுபாட்டால், நிறைவுறச் செய்துவிட முடியும். 3. அறிவுத் தேவை - இருவரின் அறிவுணர்களையும், பகிர்ந்து கொள்ளவும், அவை பற்றி அறிந்து, வளர்த்துக் கொள்ளவும், இறுதியில் மெய்ப்பொருள் உணர்வு பெறவும் உதவுவது. இதிலும் ஏற்றத் தாழ்வுகள் இருப்பினும் அவற்றை உடலாலும், மனத்தாலும் நிறைவு செய்துகொள்ளலாம். - இவற்றையே இன்பம், அறம், பொருள் என முறையே பாகுபடுத்தினர். இவற்றின் இன்பம் முதற்கூறாக இருப்பினும், அஃது இயற்கையின் அழுத்தத்தால் தவிர்க்க முடியாததாக இருப்பதால், கட்டாயம் செய்யப்பட