பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

160


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 160

அ-2. இல்லறவியல் அ-2-1. இல்வாழ்க்கை - 5 அதிகார முன்னுரை:

அஃதாவது, இல்லிலிருந்து வாழ்கின்ற வாழ்க்கையாதலாலும், இல்லை விட்டு வெளியேறி, இயற்கையோடு சூழ்ந்த பாழி ஆச்ரம வாழ்க்கைக்கு மாறுபட்டதாலும் இஃது, இல் வாழ்க்கை எனப் பெற்றது. .

இல்லம், மனை, வீடு, அகம் ஆகியவை ஒரு பொருள் குறித்த பல சொற்கள். மக்களின் பண்பு, நாகரிகப் படிநிலை வளர்ச்சியின் படி, பல்வேறு சிறப்பு நிலைகளை உணர்த்துவதற்குத் தனித்தனிச் சொற்களாக இவை

இல்லம் - புழங்கிடமாக கொண்ட ஒர் அடைவின் உள் பகுதியைக் குறித்தது. இல் உள்ளே - இல்லம். -

மனை நிலையான புழங்கிடத்தின் அடைவைக் குறித்தது. மன்னுதல் நிலைத்தல்; மன் - மனை. . .

விடு - வாழ்க்கை முயற்சிக்காகச் சென்ற வெளிவுலகத் தொடர்பினின்று விடுபட்டு வந்து, தன் உறவொடு தங்கி, ஒய்வு கொள்ளும் இடம். விடுதல் - விடு - வீடு. - - இதே போல உயிர் இவ்வுலகத்து உடலொடு வாழ்ந்து களைத்துப்