பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

184


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் | 84

நின்று, அதன் விளைவையும் பயனையும் அவனுக்குத் தருகிறது. விளைவு பண்பும் பயன் புகழுமாகும்.

மற்று, அறத்தின் பிற அனைத்துக் கூறுகளுக்கும் இல்லறமே அடிப்படை என்க. இனி, அறத்துக்கு மட்டுமின்றிப் பொருளுக்கும், இன்பத்திற்கும்கூட இல்லறம் அடிப்படை ஆகும். அதனால் வாழ்வின் அனைத்துத் துறையினர்க்கும், பகுதியினர்க்கும் இல்லறமே மூலக்களமாகி நிற்கிறது என்றுணர்க. இதனை விளக்கி நிற்பதே, இந்நூலின் முழுநோக்கமாக ஆசிரியர் கொண்டிருப்பதை ஆங்காங்கு உணர்க.

இக்கருத்து ஆரியவியலினின்று மாறுபடுகின்ற முதலிடமாக ஆசிரியர் கருதுவதால், மாந்த வாழ்வின் நான்கு கூறுகளாக அவர்கள் கருதும் பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாஸம் ஆகியவற்றுள் சந்நியாஸ்மே மேலான தர்மம் என்று கூறுவதற்கு நேர் எதிராக நின்று, அஃதன்று இல்லறமே அறம், அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் உரத்தும் அறைகிறார் என்க.

இனி தமிழியலின் படி, முழுமையறமாகிய இல்வாழ்க்கையுள் தான், மாந்தன் அனைத்துக் குற்றங்களையும் செய்ய வாய்ப்பு மிகுதி: ஆரியவியலின் படி, சந்நியாஸ்த்துள், புலனடக்கத்திற்குரிய இருக்கை (ஆசன முயற்சிகளும், ஒருமையுணர்வாகிய ஊழ்க ஒக முயற்சிகளும், ஆற்றலும் நோற்றலும் கூடிய தவ முயற்சிகளும் இருப்பதால், அங்கு உடல் வழியும், உள்ளத்தின் வழியும், அறிவின் வழியும் தவறுகள், குற்றங்கள் நேர்வதற்கில்லை என்று, அதனை உயர்த்திக் கூறுவார் கூற்றை நினைவு படுத்தத்தான், அஃதும், பிறன் பழிப்பதில்லாயின், நன்று, அஃதாவது அறத்தின் முழுவடிவமாகிய இல்லறத்தை பழிசேராமல் நடத்துவதே மிகு சிறப்பாகும் என்று தமிழியல் குடும்பத்தார்க்கு எச்சரிக்கை செய்தார் என்க. 2. அஃதும் - அவ்வறமாகிய பெருமைக்குரிய இல்லற வாழ்க்கையும்.

3. பிறன் பழிப்பதில்லாயின் நன்று - பிறனொருவனுடைய குற்றஞ் சுட்டிப் பழித்தலுக்கு ஆளாகாமல் இருப்பின் மிகச் சிறந்தது ஆகும். யாவனோ ஒருவன் பழிப்பினும் அது சிறப்பிழக்கும் என்று உணர்த்தற்குப் பிறன் என்று ஒருமையில் கூறினார்.

- பழிப்பது குற்றஞ்சுட்டி இழிவு கூறுவது. அஃதாவது இல்வாழ்க்கையுள் ஈடுபட்டுள்ள தலைவனையோ, தலைவியையோ, அவர் களின் மக்களையோ, நட்பையோ அவர்களின் கடைப்பிடியையோ, ஒழுக்கத்தையோ, குறையோ, குற்றமோ கூறிப்