பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

202


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 202

அடித்தளமாகவும் கடைக் காலாகவும் விளங்குவன அக்குடும்பத் தலைவியின் மாண்பும், மன.ஒருமையும் கற்பும், ஒழுக்கமுமே என்று குமுகாய நலவறிஞர்கள் கருதியிருந்ததாலும், நுாலாசிரியரும் அக்கருத்தையே போற்றிக் கொண்டவராதலினாலும், இல்லக்கிழத்தியின் பேரொழுகலுக்குப் பெருமதிப்புக் கொடுத்து உரைக்கப்பெற்றதென்க. - கொழுநன் என்னும் சொல் கணவன் என்னும் சொல்லினும், பொருள் பொதிந்தது, பண்புணர்வு கொண்டது.

கணம் - கூட்டம் - சேர்க்கை கணத்தல் - கூடுதல் சேர்தல். கணவன் - கூடுதலுக்கு உரியவன், சேர்தலுக்குரியவன். உடலுறவு கொள்ளுதற்குரியவன். கொள் - கொளுநன் - கொழுநன் கொள்ளுதற்குரியவன், . கொண்டவன். . கொள்ளுதல் பற்றுதல் கொடிபோலும் பற்றுக்கோடில்லாத ஒரு பெண் பற்றுதற்கு உரிய கொழுகொம்பு போன்றவன். கழக இலக்கியங்களில் கொழுநன் என்னும் சொல்லாட்சியை விட, 'கணவன் என்னும் சொல்லாட்சியே மிகுதியாக உள்ளது.

கொழுநன் என்னும் சொல் ஏறத்தாழ முப்பது இடங்களிலும் 'கணவன் என்னும் சொல் ஏறத்தாழ நாற்பது இடங்களிலும் பயிலப் பெற்றுள்ளன. -

இவற்றைவிட, காதலன், காதலர், காதலவன், காதலவர் என்னும் சொற்கள் கழக இலக்கியங்களில் ஏறத்தாழ இருநூற்று முப்பது இடங்களில் பயிலப் பெற்றுள்ளன. . -

திருக்குறளிலோ காதலர்’ என்னும் சொல் பத்து இடங்களிலும், 'காதலவர் என்னும் சொல் நான்கு இடங்களிலும், கொழுநன் என்னும் சொல் இக்குறளில் ஒரே இடத்தில் மட்டும் பயிலப் பெற்றுள்ளன. கணவன் என்னும் சொல் திருக்குறளில் வரவே இல்லை. கணவனைக் குறிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் காதலர்’, ‘காதலவா என்னும் சொற்களே ஆளப் பெறுகின்றன. . -

- இனி, தொழுதல் என்பது கைகூப்பி வணங்குதல், தொட்டு வணங்குதல் என்பார் பாவாணர், மனத்தால் தொழுதலும் உண்டு. - ஈண்டுக் குறிப்பிடப் பெறுவது மனத்தால் தொழுதலே. சிலர் "தொழுது எழுதலா எழுந்து தொழுதலா என்றெல்லாம் வீணாய்வு செய்வர். படுக்கையிலுள்ளாள் கண்விழித்த பின், கணவனை மனத்தால்