பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

210



பொழிப்புரை : தன்னைப் பற்றியும் தன்னால் தன் கணவனைப் பற்றியும் பிறர் பாராட்டிப் பேசும்புகழ் மொழிகளை விரும்பிய மனைவியைக் கொண்டில்லாத கணவற்கு, வேறு சில கரணியங்களுக்காகத் தன்னை இகழ்ந்து பேசுகிறவர்கள் முன்னிலையிலும், காளை போல் ஏற்றமாய் நடக்கும் ஒரு பெருமித நடை இல்லை.

சில விளக்கக் குறிப்புகள் :

1. புகழ் புரிந்த இல் : தன்னைப் பற்றியும் தன்னால் தன் கணவரை பற்றியும் அண்டை அயலிலுள்ளவர்களும் பெற்றாரும் உற்றாரும் பாராட்டிக் கூறுகிற புகழ்மொழிகளை விரும்புதலுறும் தலைவி.

- இஃது இல்லத்தலைவி ஒருத்திக்கு இயல்பாக இருக்கின்ற மனவுணர்வு. புரிதல் - விரும்புதல், விளங்குதல்,

--- தகுமனைவியின் பெருமை கூறிக் கணவரை விளித்தல் இலக்கியங்களில் கூறப்பெற்றுள்ளன.

'செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ'
- புறம், 3.6
'அறம்பா டிற்றே ஆயிழை கணவ.
--- புறம். 34.9
சேணுறு நல்லிசைச் சேயிழை கணவ'
-- பதிற். 88.36

- மற்று ஈண்டுப் புகழ் என்பது, தான் மட்டும் பெருமை மிக்க அருஞ்செயல் செய்து, அண்டை அயலோர் மட்டன்றி, ஊரும் உலகமும் பாராட்டும் பெருஞ்சீர் அன்று. அது, தனிச்சிறப்புடையார் தவிர, பொதுவானமைந்த அனைத்து இல்லக்கிழத்தியரும் பெறுதல், கடினமும் இயல்பன்றும் ஆகலின் என்க.

இதில், 'புகழ்புரிந்த இல்லிலோர்' என்னும் பாடமே தொடைப் பிழையின்றியிருக்க, பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர் பலரும் 'புகழ்புரிந் தில்லிலோர்க்கு' எனப்பாடங் கூறி, பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது என்று விளக்கம் எழுதுதல் தேவையின்று என்க. மேலும் 'புகழ் புரிந்தில்லிலோர்' என்பது தொடையின்பம் பயவாததும் உன்னுக. .

2. இகழ்வார் முன் : வேறுபிற கரணியங்களால் தன்னை இகழ்ந்துரைப் பார் முன்னும் - தன்னை வேறு பிற கரணியங்களால் சிறுமையுற்றுப் பிறர் இகழ்ந்து பேசுவார் முன்னிலையிலும், மனைவியது பெருமையால் ஒருவன்