பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

225

அ - 2 - 3 - மக்கட்பேறு - 7


அஷ்ட வஸ்"க்கள், அஷ்ட வணிகக் குணம், அஷ்ட வர்க்கம், அஷ்ட வாதம், அஷ்ட விகாரம், அஷ்ட தாடனம், அஷ்ட வித்தியேசுரர், அஷ்ட வீரட்டம், அஷ்ட ஆறு, அஷ்ட ஜெயம், அஷ்ட ஐஸ்வர்யம், அஷ்ட பைரவர், அஷ்ட சீலம், அஷ்டாங்க நமஸ்காரம், அஷ்டாங்க மார்க்கம், அஷ்டாங்க யோகம், அஷ்டாங்க வந்தனம், அஷ்டாவதானம் - முதலியவை. (அஷ்ட எட்டு)

இனி, எட்டு பத்து பதினெட்டு என்னும் எண் தொகையில் கூறப் பெறும் வழக்குகள்:

அஷ்டா தச குணம், அஷ்டா தச தர்ம சாஸ்திரம், அஷ்டா தச படை, அஷ்டா தச புராணம், அஷ்டா தச மூலம், அஷ்டா தச வித்தை, அஷ்டா தச வியவகாரபதம், அஷ்டா தச விவாத பதம், அஷ்டா தச சோ புராணம் - முதலியவை. (தச - பத்து)

ஒன்பது :

தமிழ் வழக்கு : ஒன்பது வாயில், ஒன்பது சிவபேதம், ஒன்பான் மணி, ஒன்பான் சுவை - முதலியவை.

வடமொழி வழக்கு : நவ கண்டம், நவ கிருகம், நவ சக்திகள், நவ சிரார்த்தம், நவதாரணை, நவதானம், நவதான்யம், நவ தீர்த்தம், நவ நதி, நவ துவாரம், நவதாகம், நவநாத சித்தர்கள், நவ நாயகர், நவநிதி, நவபதார்த்தம், நவபாஷாணம், நவபுண்ணியம், நவபேத மூர்த்தம், நவ பிரம்மர், நவமணி, நவமணிமாலை, நவரசம், நவரத்தினம், நவராத்திரி, நவரத்தினங்கள், நவலோகம், நவவர்ஷங்கள், நவவாயில், நவ விலாச சபை, நவவீரர்கள் - முதலியன.

பத்து :

தமிழ் வழக்கு : பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து, பதின்மர் முதலியன. இவையன்றி பன்+இரு (அல்) இரண்டு சேர்ந்த பன்னிரு பன்னிரண்டு, பன் + நான்கு பன்னான்கு பத்து + எண் - பதினெண், பத்து எட்டு பதினெட்டு ஆகிய எண் வழக்குகளும் உண்டு.

அவை : பன்னிரு படலம், பன்னிரண்டாதித்தர், பன்னிரு கையன், பன்னாங்குழி, பதினாலு லோகம், பதினெண் கணம், பதினெண் கீழ்க் புராணம், பதினெண் பாடை முதலியன. -

வடமொழி வழக்கு : தசகரம் (தீய செயல்கள் பத்து. அவை: அபாவனை நிந்தனை), காமம், சிற்றின்பம், சூது, நடனம், பகற்றுயில், மதுஆண், மாயம்,