பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

229

அ - 2 - 3 - மக்கட்பேறு - 7


குடும்பத்தவர்கள்', 'ஒழுக்கமில் குடும்பத்தவர்கள்', 'பண்பில் குடும்பத்தவர்கள் என்னும் வகையிற் பேசலும், ஏசலும், இகழ்தலுமாம்.

3.பழி பிறங்கா: பிறரால் பழிக்கப்படும், அல்லது இகழப்படும் வகையில் விளங்கித் தோன்றா. பிறங்குதல் - விளங்கித் தோன்றுதல். 'குன்றின் மேலிட்ட விளக்குப் போல்', 'மதிக்கண் மறுப்போல்' எண்க

- இதே வகையில், இதே பொருளில், இந்நூலுள் வந்த ஒரு கருத்தும் இங்கு நினைதற்குரியது. அது, இது:

'குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து'
— 957

- இவ் வுண்மையினை

- பலர் புகழ் நலந் திகழ் பண்புடைச் செயல்கள் பலவும் செய்து, இரணிய முட்டத்துப் பெருங்குன்றுர்ப் பெருங்கெளசிகனார் பாடிய, 'மலை படுகடாம்' என்னும் அரிய இலக்கியம் பெற்ற பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்து நன்னன் சேய் நன்னன் என்பானின் தந்தையும்,

- சிற்றரசர் பற்பலரை அழித்தழித்து, அவர்கள் உற்ற பொருள்களையெல்லாம் கொள்ளையிட்டு, வாரி வந்தவனும் (அகம் 152, 239),

அவ்வாறு போரில் தோற்ற வேந்தர்களின் மனைவிமார் கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அவர்தம் பட்டத்து யானைகளைப் பிணித்துக் கொணர்ந்தவனும் நற்: 270)

- போரில் படைத்துணை புரிய வந்த நடைகெழு நண்பன் ஆய் எயினனைப் பகைவர் பொருது அழியவிட்டுத் தன்னை ஒளித்துக் கொண்ட வஞ்சகமும் இரண்டகமும் புரிந்தவனும் (அகம்: 208, 396,)

- நீரில் ஊர்ந்து வந்த காவல் தோட்டத்து மாவன்காயை ஆவன் முதிர்வால் எடுத்துண்ட பேதைக் கன்னியின் எடையெடைப் பொற்பாவையும், ஒன்பதிற்று ஒன்பது களிறும் கொடுப்பப் பெற்றோர் இறைஞ்சியும், பாடுபுகழ்ப் புலவரும் ஊராரும் வேண்டியும், உடன்பட்டேற்காது, பெண்கொலை புரிந்தவனும் (குறுந் 292,)

- ஆகிய, கொண்கானத்துக் கடம்பின் பெருவாயில் என்று அழைக்கப் பெற்ற வாகைப் பெருந்துறை நன்னன் செய்த பழிச் செயல்கள், அவன் பிறங் கடையினனாகிய மகனுக்கும், அவன் பின்றைத் தலை முறை இளவிச்சிக்கோ என்னும் அரசனுக்கும் ஆகி நின்றதைப் பெருந்தலைச் சாத்தனார் பாட்டாலும் (புறம் 151), பரணர் பாட்டாலும் (குறுந்:292) அறிந்துகொள்க.