பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

240


3. இப்பாடல், குடும்பத் தொடர் கல்வியால், குடும்பமும் நாடும் மட்டுமன்றி, உலகமும் பயனெய்தி நலமும் சிறக்கும் என்று பொதுமை நலம் கூறியது.

0
க. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
69

பொருள் கோள் முறை:

தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்,
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்.

பொழிப்புரை: கல்வி கேள்விகளில் நன்கு தேர்ந்து, அறிவு மிகப்பெற்று பிறர் பின்பற்றத் தகுதியுடையோன் எனும் நிலை பெற்ற தன் மகனைச் "சான்றோன் என்று அறிஞர் பிறர் சொல்ல, அதனைச் செவி மடுத்த தாய், அவனைக் கருவுயிர்த்து (அயர்வுற்ற அப் பொழுதில், பிறர் வாய் மகன் எனக் கேட்டு மகிழ்ந்ததினும் பேரளவாய் உள்ளக் களிப்பு எய்துவள்.

சில விளக்கக் குறிப்புகள்:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்:, தான் கருவுயிர்த்த அப் பொழுதினும் பேரளவில் உள்ளக் களிப்பு எய்தும். ஈன்றல் - கருவுயிர்த்தல் ஈ - தா - என்னும் தருதற் பொருள்தரும் வேர்ச் சொற்களடியாகப் பிறந்த சொற்கள் ஈன்றாள், தாய் என்பன. - ஈ - ஈன் - ஈனு ஈன்றாள் - தன்னைக் கருவுயிர்த்தவள்.

- தா தா + ஆய் - தாய் - தன்னை உலகுக்குத் தந்தவள்.

-இவற்றுள், ஈன்றாள் என்பது, கருவுயிர்த்தவள் என்னும் படைப்புப் பொருளையும், தாய் என்பது, புறத்தே பெற்றுத் தந்தவள் என்னும் அளிப்புப் பொருளையும் தரும். ".

- தா என்னும் வேரடியாகவும், தள்ளுதல் என்னும் வினையடியாகவும் பிறந்த இதனினும் முந்திய சொல் தள்ளை என்பது,