பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

239

அ - 2 - 3 - மக்கட்பேறு - 6


5. முந்தி இருப்பச் செயல் முன்னிலை பெறுமாறு, கற்றவனாய்ச் செய்வது; உருவாக்குவது. எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற என்றது நாலடியும் (134,)

6. இதனால், தந்தை மக்கட்குச் செய்யும் கடமை கூறப் பெற்றது.

0
சுஅ. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68

பொருள் கோள் முறை இயல்பு.

பொழிப்புரை பெற்றோர் தம்மைவிடத் தம் மக்கள் கற்று அறிவுடை யராயிருத்தல், இவ்வுலகின்கண் வாழும் மாந்தர் எல்லார்க்கும் நண்மை பயப்பது.

சில விளக்கக் குறிப்புகள்:

தம்மின் தம் மக்கள் அறிவுடைமை பெற்றோரைவிடத் தம் மக்கள் கற்று அறிவுடையராயிருப்பது.

- கல்வி மேன்மேலும் வளர்தற்குரியது மட்டுமன்று, அது மரபுத் தொடர்பால் படிநிலை வளர்ச்சி பெற்றுச் சிறக்கக் கூடியது.

-கற்றறிவுடையார்க்குப் பிறக்கும் மக்கள் மேலும் அறிவறியும் திறன் பெற்றிருப்பது இயல்பும் ஆகும்.

2. மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது:

இவ்வுலகிலுள்ள மக்களினம் எல்லாவற்றுக்கும் பயனுடையது.

- இதனால், தம் மக்களைத் தம்மினும் கற்றவர்களாக்குவது, பெற்றோர்கள் தங்களின் முதுமைக் காலத்திற்கும், பிறங்கடைக்கும் பொருள் வழி, நன்மை பயப்பர் என்று கருதாமல், உலகப் பயன் நோக்கி உதவட்டும் என்று கருதுதல் வேண்டும் என்று உலகப் பொதுமை கூறினார் என்க.

- மன்னுயிர் என்றது மக்களினத்தை -