பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

242


கேட்டறிந்தாள் என்க. -

"பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார்" - என்று பரிமேலழகர் குறிப்பது, அவர் சார்ந்த ஆரியவியலின்படி பெண்களைக் குறைத்து மதிப்பிட்டதாம். இஃது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று அன்றியும் இகழத்தக்கதுமாம்.

5. இது, மக்களால் தாய் பெறும் அறிவின்பத்தையும், அவரைச் சான்றோராக்கிய தந்தையின் கடமையையும் ஒரு சேர எண்ணி உவந்தது. ஆகலின் அதன்பின் வைக்கப்பெற்றது.

:எ0. மகன்தந்தைக் கற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

70

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை மகன் ஒவ்வொருவனும், தன்னைப் பிறப்பித்துப் பேணி வளர்த்துக் கற்பித்து வழ்தற்குத் தகுதியாக்கிய தந்தைக்கு ஆற்ற வேண்டிய நன்றிக்கடன் என்னென்றால், இவன் இவ்வாறு அனைத்தானும் சிறந்து விளங்குதற்கு, இவன் தந்தை என்னென்ன் வகையில் பாடு நோற்றானோ என்று பிறர் பாராட்டிக் கூறும் உரையைப் பெற்றுத் தருவது.

சில விளக்கக் குறிப்புகள்:

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி: ஒவ்வொரு மகன் என்பவனும் தன்

தந்தைக்கு ஆற்றுகின்ற நன்றிக்கடன். மகளைத் தவிர்த்து, மகன் என்று கூறியது, மகள் திருமணத்திற்குப் பிறகு இன்னொருவர்க்கு வாழ்க்கைப்பட்டுத் தனக்கென வேறு குடும்பப் பொறுப்பு அமைவதால் தன் பெற்றோர்க்கென்று தனிக்கடமை செய்ய இயலாமையால் என்க. -

- தந்தைக்கு என்ற பொதுவிற் குறித்தாலும் அது தாய்க்கும் சாரும். என்னை ? மக்கள் வளர்ப்பிலும் புரப்பிலும் தாயின்றித் தந்தை தனித்து இயங்குதல் இயலாமையின் என்க. 

-ஆற்றும் உதவி: செய்த நன்மைக்குச் செய்யும் நன்றிக் கடன்; கைம்மாறு.